குளுக்கோமா அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி எப்படி குணமடைவார்?
குளுக்கோமா அறுவை சிகிச்சை கண் அழுத்தத்தைக் குறைத்து, பார்வையை நிலைப்படுத்த உதவும் என்றாலும், அது குளுக்கோமாவை முழுமையாக நீக்குவதில்லை. அறுவை சிகிச்சையின் பலன்கள் நீண்ட காலம் நீடிப்பதை உறுதி செய்ய, நோயாளி பின்வரும் குறிப்புகளை பின்பற்ற வேண்டும்:
- நோயாளி லேசான சிவப்பு, வீக்கம் மற்றும் கண்ணைச் சுற்றி எரிச்சல் ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும், கண்ணைத் தேய்த்து சிக்கல்களை ஏற்படுத்துவதைத் தவிர்க்க, நோயாளி பாதுகாப்பான கண்ணாடியை அணிய வேண்டும்.
- நோயாளி அறுவை சிகிச்சைக்குப் பின் பரிந்துரைக்கப்பட்ட கண் சொட்டு மருந்து மற்றும் மருந்துகளளை தவறாது எடுத்துக்கொள்ள வேண்டும்.
- தாங்க முடியாத வலி, சீழ் வடிதல், கண்ணில் இருந்து நீர் வடிதல், பார்வைத் களத்தில் நிழல் விழுதல், பார்வை குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும்.
- முதல் இரண்டு வாரங்களில், நோயாளி குனிதல், ஓடுதல் மற்றும் தூக்கும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
- நோயாளிக்கு நீச்சல், டைவிங் மற்றும் இதுபோன்ற மற்ற நடவடிக்கைகளுக்கு வாழ்நாள் முழுவதும் முன்னெச்சரிக்கை தேவைப்படலாம்.
- மீண்டும் பயன்படுத்தக்கூடிய கான்டாக்ட் லென்ஸ்கள் தனிப்பட்ட நோயாளியின் அடிப்படையில் குணமடைவதற்கு உதவலாம் அல்லது தாமதப்படுத்தலாம், எனவே இது தொடர்பாக உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- கண் மேக்கப் அல்லது பிற கண் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கும் முன் உங்கள் அறுவை சிகிச்சை நிபுணரை ஆலோசியுங்கள்.
Lifestyle tips to prevent worsening of glaucoma
குளுக்கோமா மோசமாகாமல் இருக்க வாழ்க்கை முறை குறிப்புகள்
- குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரைகள், சொட்டுமருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மருந்து மாத்திரைகள் சாப்பிடாமல் இருப்பதும், சாப்பிட தாமதிப்பதும் உங்கள் நிலையை மோசமாக்கும். கூடுதலாக, நீங்கள் மற்ற நோய்களுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டால், அதில் கார்டிகோஸ்டீராய்டுகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எந்த ஒரு உடல்நலப் பிரச்னைக்கும் சுய மருத்துவம் வேண்டாம்.
- கண்ணில் ஏற்படும் எந்த ஒரு காயமும் குளுக்கோமா முன்னேற்றத்திற்கு உதவக்கூடும் என்பதால், கீழே விழுதலையும் விபத்துக்களையும் முடிந்தவரை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
- டீ அல்லது காபியை அதிகமாக எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவை கண்களின் உட்புற அழுத்தத்தை உயர்த்தும். மேலும் ஒரே நேரத்தில் அதிக அளவு தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- உடற்பயிற்சியை பாதுகாப்பாக செய்யுங்கள். சில உடற்பயிற்சிகள் இன்ட்ராகுலர் பிரஷரை பராமரிக்க உதவும் என்றாலும், அதிகப்படியான உடற்பயிற்சிகள் கண்களின் அழுத்தத்தையும், சிரமத்தையும் அதிகரிக்கும். வாரத்தில் சுமார் 3-4 முறை 25 நிமிடங்களுக்கு ஏரோபிக் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதில் நீச்சல், மெல்லோட்டம் அல்லது நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்றவை அடங்கும்.
- கனமான எடைகளை தூக்குவதையும், புஷ்அப்களை செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை கண் அழுத்தத்தை ஏற்படுத்தும். தலை பகுதியை அழுத்தும் சிரசாசனம் போன்ற யோகாசனங்களையும் தவிர்க்க வேண்டும்.
- நீங்கள் கர்ப்பமாக இருந்தால், குளுக்கோமா மருந்துகள் வளரும் கருவை பாதிக்கும் என்பதால், உங்கள் கண் மருத்துவர் மற்றும் உங்கள் மகப்பேறு மருத்துவர் இருவரையும் உங்கள் மருந்துகளைப் பற்றி கலந்தாலோசிக்க வேண்டும்.
- அன்றாட வாழ்வில் நீண்ட நேரம் டிஜிட்டல் திரையைப் பயன்படுத்தினால் அவ்வப்போது சிறிய இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள்.