Chennaiஇல் பிரிஸ்டின் கேர் மருத்துவமனையில் சரியான விழித்திரை பிரிதாலுக்கான சிகிச்சையைப் பெறுங்கள்
பார்வை உணர்வை இழப்பது என்பது ஒரு நபருக்கு மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாகும். பிரிஸ்டின் கேர் நிறுவனத்தில், விழித்திரை பிரிதல், நீரிழிவு ரெட்டினோபதி, ஸ்குவின்ட் கண், கேட்டராக்ட், அல்லது ஒளிவிலகல் பிழைகள் போன்ற கண் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உகந்த கண் பராமரிப்பை வழங்குகிறோம்.
விழித்திரைப் பிரிதலுக்கு சிகிச்சையளிப்பதற்கான அனைத்து வகையான அறுவை சிகிச்சை முறைகளையும் மேற்கொள்வதில் நன்கு பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த கண் மருத்துவர்களின் பிரத்யேக குழு Chennai இல் உள்ளது. எங்கள் மருத்துவர்கள் நோயாளிகளை முழுமையாகக் கண்டறிந்து அதற்கேற்றார் போல மிகவும் நம்பத்தகுந்த சிகிச்சை முறையை பரிந்துரைக்கின்றனர். விழித்திரை பிரிதலுக்கான விரிவான கவனிப்பைப் பெற நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
விழித்திரை பிரிதல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நீங்கள் செய்ய வேண்டியவை
விழித்திரை பிரிதலுக்கான அறுவை சிகிச்சை பயனுள்ளதாக இருந்தாலும், எதிர்காலத்தில் மீண்டும் விழித்திரை பிரிய வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்புகளைக் குறைக்கவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு கண்கள் சரியாக குணமடைவதை உறுதி செய்யவும், மருத்துவர் உங்களுக்கு விரிவான அறிவுரைகளை வழங்குவார்.
செயல்முறைக்குப் பிறகு நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:
- மருத்துவர் சொல்லும் வரை கண்களைப் பாதுகாக்க ஐ பேட்ச்சை அணிய வேண்டும்.
- ஒரு குமிழ் கண்ணில் வைக்கப்பட்டால், உங்கள் தலையின் நிலையை குறித்து கண்டிப்புடன் இருங்கள். கண் குணமாகும் போது குமிழி அப்படியே இருப்பதை உறுதிசெய்ய உங்கள் தலையை கீழே வைத்திருக்க வேண்டியிருக்கும்.
- நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கவும், கண்களை சுத்தம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்ட கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்த வேண்டும்.
உங்களால் விழித்திரை பிரிதலை தடுக்க முடியாது என்பதால், நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம், கண்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் நோய்களைத் தவிர்ப்பதாகும். அதற்காக, நீங்கள் செய்ய வேண்டியவை –
- விளையாட்டுகளை விளையாடும் போது அல்லது கண்களை பாதிக்கக்கூடிய எந்தவொரு செயலையும் செய்யும் போது பாதுகாப்பு கண்ணாடிகளை அணியுங்கள்.
- குறிப்பாக சர்க்கரை நோய் இருந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
- ஆரம்ப நிலைகளில் கண் கோளாறுகள் அடையாளம் காணப்படுவதை உறுதி செய்ய கண் பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ளவும்.
இந்த டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் உங்கள் கண்களை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
Chennaiஇல் விழித்திரை பிரிதல் சிகிச்சைக்காக பிரிஸ்டின் கேரை தேர்வு செய்வதன் நன்மைகள்
ப்ரிஸ்டின் கேரில் எங்களிடம் கண் கோளாறுகளுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு அனைத்தையும் உள்ளடக்கிய சிகிச்சையை வழங்குகிறது. நாங்கள் நோயாளிக்கு முதன்மை அளிக்கும் அணுகுமுறையைப் பின்பற்றி, நோயாளியின் தேவைக்கேற்ப சிகிச்சைத் திட்டத்தைத் பிரத்தியேகமானதாக்குகிறோம். எங்களிடம் சொந்த கிளினிக்குகள் உள்ளன மற்றும் Chennaiஇல் உயர் வசதிகள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு கொண்ட சிறந்த கண் மருத்துவமனைகளுடன் இணைந்துள்ளோம்.
ஆரம்பம் முதல் இறுதி வரை, எங்கள் நோயாளிகளின் சிகிச்சைப் பயணத்தை தடையற்றதாகவும், வசதியானதாகவும் மாற்ற நாங்கள் உதவுகிறோம். எங்களுடன், நீங்கள் பெறக்கூடியவை –
- கண் மருத்துவ நிபுணர்- பல்வேறு கண் கோளாறுகளுக்கு மிகச் சிறந்த முறையில் சிகிச்சையளிப்பதில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள கண் மருத்துவ நிபுணர்கள் எங்களிடம் உள்ளனர்.
- மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் – விழித்திரைப் பிரிதலுக்கு திறம்பட சிகிச்சை அளிக்கவும் நோயாளியின் பார்வையைப் பாதுகாப்பதற்கும் வழக்கமான மற்றும் நவீன நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம்.
- 24 X 7 உதவி- எங்கள் மருத்துவப் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர்கள், சிகிச்சைப் பயணம் முழுவதிலும் சிகிச்சை தொடர்பான அனைத்து சம்பிரதாயங்களுக்கும் நோயாளிகளுக்கு உதவி வழங்குகிறார்கள்.
- காப்பீட்டு உதவி – நோயாளிக்கான காப்பீட்டு ஒப்புதல் மற்றும் இழப்பீடு கோரும் செயல்முறையைக் கையாளும் ஒரு காப்பீட்டு ஆதரவுக் குழு எங்களிடம் உள்ளது.
- ஃபிளக்சிபிள் பேமண்ட் ஆப்ஷன்ஸ்- நாங்கள் ரொக்கம், டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், காசோலை மற்றும் சுகாதார காப்பீட்டு பாலிசிகள் மூலம் பணம் செலுத்தலை ஏற்கிறோம். நோயாளிக்கு தங்களுக்கு வசதியான கட்டண முறையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உண்டு.
- நோ காஸ்ட் EMI சேவை – நோ காஸ்ட் EMI சேவையை நாங்கள் நோயாளிக்கு வழங்குகிறோம். இதன் மூலம் சிகிச்சைக்கான முழு செலவையும் எளிதாக EMIகளாகவோ அல்லது தவணைகளாகவோ மாற்றிக்கொள்ள முடியும்.
- இலவச கேப் சேவை – அறுவை சிகிச்சை செய்யும் நாளில், எங்கள் பிரதினிதிகள் உங்களை அழைத்துச் சென்று மருத்துவமனையில் இறக்கி விட ஒரு கேப் ஏற்பாடு செய்வார்கள். பின்னர் வேறு ஒரு கேப் உங்களை எந்த கூடுதல் கட்டணமும் இன்றி மீண்டும் வீட்டில் இறக்கி விட ஏற்பாடு செய்யப்படும்.
- இலவச தொடர் ஆலோசனை- அனைத்து நோயாளிகளுக்கும் அவர்கள் குணமாகும் காலத்தில் அறுவை சிகிச்சைக்கு பின் வரும் தொடர் சிகிச்சைகளை இலவசமாக வழங்குகிறோம். நமது பிரதினிதிகளும் அவர்களுடன் தொடர்பில் இருந்து அதற்கேற்ப சந்திப்புகளை திட்டமிடுகின்றனர்.
Chennaiஇல் விழித்திரை பிரிதல் சிகிச்சைக்காக நாங்கள் வழங்கும் சேவைகளைப் பற்றி மேலும் அறிய, நீங்கள் எங்களை அழைக்கலாம் அல்லது சந்திப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்.
உங்கள் பார்வையை முழுமையாக மீட்க முடியாவிட்டால் என்ன செய்வது?
சில சந்தர்ப்பங்களில், விழித்திரை பிரிதலுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. இப்படியே போனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகும், நோயாளிக்கு ஓரளவிற்கு பார்வை இழப்பு ஏற்படலாம். அதை மீட்டெடுக்க முடியாமல் போகலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஏற்பட்டுள்ள பார்வை இழப்பின் அளவைப் பொறுத்து நோயாளி சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.
இதில் உதவக்கூடிய சில யோசனைகள்-
- உங்கள் கண்களுக்காக பிரத்யேகமாக தய்யாரிக்கப்பட்ட கண்ணாடிகள் மூலம் பார்வையை மேம்படுத்துதல். உங்கள் கண் மருத்துவரிடம் தேவைகளைப் பற்றி நீங்கள் விவாதித்தால் உங்கள் பார்வையை மேம்படுத்த சிறந்த வழியை அவர் பரிந்துரைப்பார்.
- உங்கள் வீட்டில் படிக்க மற்றும் பிற செயல்பாடுகளுக்கு சரியான வெளிச்சத்தை வைத்திருங்கள், உங்கள் கண்களை பிரகாசமான/இருண்ட விளக்குகளுக்கு வெளிப்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
- மோஷன் ஆக்டிவேடட் விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வீட்டை பாதுகாப்பானதாக மாற்றுங்கள், இதனால் குறைந்த வெளிச்சம் காரணமாக நீங்கள் பொருட்கள் மீது இடித்துக்கொள்வதோ அல்லது விழுவதையோ தவிர்க்கலாம்.
- பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஆன்லைன் ஆதரவு குழுக்கள், நெட்வொர்க்குகள் மற்றும் பிற ஆதாரங்களைப் பயன்படுத்துங்கள்.
ஒரு நபர் தனது பார்வையை இழந்தால், வழக்கமான வேலைகளைக் கூட செய்வது மிகவும் கடினமாக இருக்கலாம். அதனால்தான் கண் பார்வை குறைவதற்கான அறிகுறிகளையும் கண்களில் ஏற்படும் வேறு எந்த பிரச்னையையும் நீங்கள் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது. கண்களில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் தகுந்த சிகிச்சையை நாடுங்கள். கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க தொடர்ந்து கண் பரிசோதனைகளை செய்யுங்கள். இன்றே Chennaiஇல் உள்ள கண் மருத்துவரை சந்தித்து விரிவான சிகிச்சை பெறுங்கள்.