நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்
location
Get my Location
search icon
phone icon in white color

அழைப்பு

Book Free Appointment

நீரிழிவு ரெட்டினோபதிக்கு இந்தியாவில் சிகிச்சை

நீரிழிவு ரெட்டினோபதியானது பெரும்பாலும் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயினால் ஏற்படுகிறது. இது கண்களை பாதிக்கும் சர்க்கரை நோயின் ஒரு பிரச்சனை ஆகும். நிலைமை மோசமடைந்து பார்வை இழப்பு ஏற்படுவதைத் தடுக்க நிலைமையை சரியாக கையாள்வது அவசியம். இந்தியாவில் உள்ள நம் கண் மருத்துவர்களை அணுகி, சிகிச்சை முறைகளைக் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். இன்றே நிபுணர்களுடன் இலவச சந்திப்புக்கு முன்பதிவு செய்யுங்கள்.

நீரிழிவு ரெட்டினோபதியானது பெரும்பாலும் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயினால் ஏற்படுகிறது. இது கண்களை பாதிக்கும் சர்க்கரை நோயின் ஒரு பிரச்சனை ஆகும். நிலைமை மோசமடைந்து பார்வை இழப்பு ஏற்படுவதைத் தடுக்க நிலைமையை சரியாக ... மேலும் வாசிக்க

anup_soni_banner
இலவசமாக மருத்துவரை அணுகவும்
Anup Soni - the voice of Pristyn Care pointing to download pristyncare mobile app
i
i
i
i
Call Us
We are rated
2 M+ மகிழ்ச்சியான நோயாளிகள்
700+ மருத்துவமனைகள்
45+ நகரங்கள்

To confirm your details, please enter OTP sent to you on *

i

45+

நகரங்கள்

Free Consultation

Free Consultation

Free Cab Facility

Free Cab Facility

No-Cost EMI

இல்லை செலவு EMI

Support in Insurance Claim

Support in Insurance Claim

1-day Hospitalization

1-day Hospitalization

USFDA-Approved Procedure

சான்றளிக்கப்பட்ட செயல்முறை USFDA

நீரிழிவு ரெட்டினோபதி சிகிச்சை என்றால் என்ன?

நீரிழிவு ரெட்டினோபதியின் சிகிச்சை அதன் வளர்ச்சியின் நிலையைப் பொறுத்தது. சிகிச்சை பொதுவாக கீழே பரிந்துரைக்கப்படுகிறது- 

  • லேசானது முதல் மிதமானது வரை பெருக்கம் அல்லாத நீரிழிவு விழித்திரை நோய்க்கு விஇஜிஎஃப் எதிர்ப்பு அல்லது கார்டிகோஸ்டீராய்டு ஊசிகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
  • தீவிர பெருக்கம் அல்லாத நீரிழிவு விழித்திரை நோய்க்கு பன்ரெட்டினல் லேசர் ஒளிச்சிதைவு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
  • புரோலிஃபெரேடிவ் நீரிழிவு ரெட்டினோபதிக்கு விட்ரெக்டமி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

பிரிஸ்டின் கேர் நிறுவனத்தில், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் காரணமாக நோயாளிகள் அடிக்கடி சந்திக்கும் கண் பிரச்சனைகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். எனவே, உங்கள் பார்வையைப் பாதுகாக்க டயாபடிக் ரெட்டினோபதி, குளுக்கோமா, ரெட்டினல் நீக்கம், கண்புரை போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கிறோம். நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள மட்டுமே வேண்டும், இந்தியாவின் சிறந்த கண் மருத்துவரிடம் உங்கள் ஆலோசனையை நாங்கள் அட்டவணைப்படுத்துவோம். 

நீரிழிவு ரெட்டினோபதி Surgery Cost Calculator

Fill details to get actual cost

i
i
i

To confirm your details, please enter OTP sent to you on *

i

Best Eye Clinic in India for Diabetic Retinopathy Treatment

நீரிழிவு ரெட்டினோபதி என்பது சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பார்வை இழப்பை ஏற்படுத்தும் ஒரு மோசமான நிலையாகும். பிரிஸ்டின் கேர் அனைத்து நிலைகளிலும் உள்ள நீரிழிவு ரெட்டினோபதி நோய்க்கு உகந்த சிகிச்சையை வழங்குகிறது. நோயாளியின் கவலையை தீர்க்க தேவையான தொழில்நுட்பங்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். ஆன்டி-விஇஜிஎஃப் மற்றும் ஸ்டீராய்டு ஊசிகள், லேசர் சிகிச்சை, விட்ரெக்டமி போன்ற சிகிச்சை முறைகள் உள்ளன. 

பிரிஸ்டின் கேர் நிறுவனம், நீரிழிவு ரெட்டினோபதி சிகிச்சையில் நன்கு பயிற்சி பெற்ற அதிக அனுபவம் வாய்ந்த கண் மருத்துவர்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நோயாளியும் சிகிச்சையை எளிதாக அணுகும் வகையில் இந்தியா முழுவதும் எங்கள் சொந்த கிளினிக்குகள் மற்றும் கூட்டு மருத்துவமனைகள் உள்ளன. எங்கள் சிகிச்சை மையங்களில் ஒவ்வொரு நோயாளிக்கும் சரியான கவனிப்பை வழங்கத் தேவையான நவீன கட்டமைப்பு மற்றும் உயர் வசதிகள் உள்ளன. 

எங்களுடன், நீரிழிவு ரெட்டினோபதி நோய்க்கான சிறந்த சிகிச்சையை குறைந்த விலையில் பெறுவீர்கள் என்பதை அறிந்து நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். நீங்கள் எங்களுக்கு ஒரு அழைப்பு கொடுத்து, எங்கள் கண் மருத்துவர்களிடம் உங்கள் ஆலோசனையை அட்டவணைப்படுத்தலாம். 

நீரிழிவு ரெட்டினோபதி சிகிச்சையில் என்ன நடக்கிறது?

நோயறிதல் 

நீரிழிவு ரெட்டினோபதி பொதுவாக பின்வருவனவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான கண் பரிசோதனையின் போது கண்டறியப்படுகிறது 

  • பார்வை கூர்மை சோதனை- ஒரு கண் விளக்கப்படம் (ஐ சார்ட்) என்பது அந்த நபர் வெவ்வேறு தூரங்களில் எவ்வளவு நன்றாகப் பார்க்க முடியும் என்பதை அளவிடப் பயன்படுகிறது. 
  • பியூபிள் டையலேஷன்- நீரிழிவு ரெட்டினோபதி நோயின் அறிகுறிகளை கண்டுபிடிக்க மருத்துவர் விழித்திரையைத் தெளிவாகப் பார்க்கக்கூடிய வகையில் பியூபிள் விரிவடையச் செய்யப்படுகிறது. 
  • ஃபண்டஸ் ஃபோட்டோகிராஃபி அல்லது ஆப்தால்மோஸ்கோபி – ஆப்தால்மோஸ்கோபி என்பது கண் மருத்துவர் பயன்படுத்தும் விழித்திரைக்கான ஒரு பிரத்தியேக தேர்வு- 
  1. விழித்திரையின் குறுகலான காட்சியைப் பார்க்க ஒரு சிறப்பு பெரிதாக்கும் கண்ணாடியைக் கொண்ட ஒரு ஸ்லிட் விளக்கு பயோமைக்ரோஸ்கோப். 
  2. விழித்திரையின் பரந்த பார்வையைப் பெற ஒரு ஹெட்செட் அல்லது இன்டைரெக்ட் ஆப்தால்மோஸ்கோப் பயன்படுத்தப்படுகிறது. 

நீரிழிவு ரெட்டினோபதியால் ஏற்படும் சேதத்தை அடையாளம் காண இந்த பரிசோதனை போதாது. ஃபண்டஸ் புகைப்படமானது ஃபண்டஸின் கணிசமான பெரிய பகுதிகளைப் படம் பிடிக்கிறது. இது மைய மற்றும் புற விழித்திரை, ஆப்டிகல் டிஸ்க் மற்றும் மாகுலா ஆகியவற்றின் புகைப்பட ஆவணப்படுத்தலை உருவாக்குகிறது. 

  • ஃபன்டஸ் ஃப்ளூரோசெயின் ஆஞ்சியோகிராஃபி (எஃப்எஃப் ஏ) – இந்த சோதனையில் (ஒரு ஃப்ளூரோசெயின் சாயம்) விழித்திரையில் இரத்தம் மற்றும் சாயத்தின் சுழற்சியைக் கண்டறிய ஒரு இமேஜிங் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. விழித்திரைக் குழாய்களில் கசிவைக் காட்டும் சாயத்தின் கறைகளை அடையாளம் காண இது உதவுகிறது. 
  • ரெட்டினல் வெஸல் அனாலிசிஸ்- நீரிழிவு ரெட்டினோபதி நோய் தோன்றுவதற்கு முன்பு விழித்திரை தமனிகள் மற்றும் நரம்புகளின் தானியங்கி கட்டுப்பாட்டுக்கு கண் பராமரிப்பு நிபுணர்களால் இந்த தேர்வு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இன்னிலையின் ஆரம்பகால அடையாளம் என்பது இரத்தக்குழாய் செயலிழப்பு ஆகும், இது ஒரு சிறப்பு ஃபண்டஸ் கேமராவின் உதவியுடன் வெற்றிகரமாக பகுப்பாய்வு செய்யப்படலாம். 
  • ஆப்டிகல் கோஹெரன்ஸ் டோமோகிராபி- இந்த தேர்வானது, விழித்திரையின் குறுக்கு வெட்டு படங்களை உருவாக்க லேசர் ஒளிக்கற்றை குறுக்கு வெட்டுகளை பயன்படுத்தி விழித்திரையின் தடிப்பை அளவிடுட்டு வீக்கத்தை அடையாளம் காண்கிறது. 

இந்த அனைத்து பரிசோதனைகளும் விழித்திரையைப் பரிசோதிப்பதற்காகவும், நீரிழிவு ரெட்டினோபதி நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறியவும் செய்யப்படுகிறது 

  • ரத்தக் குழாய்களில் கசிவு 
  • ரெட்டினல் வீக்கம் 
  • விழித்திரையில் வெளிர் நிற, கொழுப்பு படிவுகள் 
  • நியூரோபதி அல்லது சேதமடைந்த நரம்பு திசுக்கள்
  • விழித்திரை நாளங்களில் அசாதாரண மாற்றங்கள் 

ஒரு நபருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டவுடன், அவருக்கு நீரிழிவு நோய் தொடர்பான நிலைமைகளான, நீரிழிவு ரெட்டினோபதி, நீரிழிவு குளுக்கோமா, விழித்திரை விலகல், நீரிழிவு மாக்குலர் எடிமா போன்றவற்றிற்கு மிகவும் கவனமாக பரிசோதனை செய்யப்படுகிறது. 

நீரிழிவு ரெட்டினோபதி சிகிச்சைக்கு தயாராவது எப்படி?

கண் மருத்துவர் எந்த சிகிச்சையை பரிந்துரைத்திருக்கிறார் என்பதைப் பொறுத்து, தயாராகும் படினிலைகள் சற்று வேறுபடலாம். நீரிழிவு ரெட்டினோபதியின் முன்னேற்றத்தை மந்தப்படுத்துவதற்கு கொடுக்கப்படும் ஊசிகளுக்கு எந்த குறிப்பிட்ட முன்னேறப்பாடுகளும் தேவையில்லை. 

லேசர் சிகிச்சைக்கான முன்னேறப்பாடுகள் 

  • மங்கலான பார்வை காரணமாக வீடு திரும்பும் போது வாகனம் ஓட்ட முடியாது என்பதால் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரை உடன் வரச் சொல்லுங்கள். 
  • அறுவைசிகிச்சைக்கு முன் நோயாளி சரியான உணவை உட்கொள்ளவும், நீரிழிவு நோய்க்கான மருந்துகளை உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. 
  • ஆஸ்பிரின், ஐப்யூபுரூஃபன், வார்ஃபரின் உள்ளிட்ட ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். 

விட்ரெக்டமிக்கு முன் செய்ய வேண்டிய ஏற்பாடுகள்

விட்ரெக்டமிக்கு முன் நோயாளிக்கு கொடுக்கப்படும் அறிவுறுத்தல்கள் லேசர் சிகிச்சைக்கு கொடுக்கப்பட்டவையை ஓரளவு ஒத்திருக்கும். பொதுவான வழிகாட்டுதல்கள்- 

  • அறுவை சிகிச்சைக்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பு ரத்த மெலிதாக்கும் மருந்துகளை எடுப்பதை நிறுத்துங்கள். பக்கவாதம் அல்லது மாரடைப்பை ஏற்படுத்தும் இரத்த உறைவு அபாயம் உங்களுக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே மருத்துவர் அதற்கு எதிராக ஆலோசனைகளை வழங்குவார். 
  • உங்கள் கண்களை முழுமையாகப் பரிசோதனை செய்து, மருத்துவரின் குழுவுக்கு அனைத்து சோதனை அறிக்கைகளையும் வழங்குங்கள். 
  • சர்க்கரை நோய்க்கான மருந்துகளை மிகக் குறைந்த அளவு தண்ணீருடன் எடுத்துக் கொள்ளுங்கள். 
  • அறுவை சிகிச்சை செய்யும் நாளில் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. 
  • மேக்கப் போடுவதை தவிர்த்து விட்டு, தளர்வான, வசதியான ஆடைகளை அணிய வேண்டும். 

Pristyn Care’s Free Post-Operative Care

Diet & Lifestyle Consultation

Post-Surgery Free Follow-Up

Free Cab Facility

24*7 Patient Support

நீரிழிவு ரெட்டினோபதிக்கான லேசர் சிகிச்சை

கண்ணின் பின்புறம் புதிதாக உருவான அசாதாரணமான ரத்தக்குழாய்களுக்கு சிகிச்சை அளிப்பது லேசர் சிகிச்சை. புதிய ரத்தக்குழாய்கள் பலவீனமாக இருப்பதால் அவற்றை நிலைப்படுத்த லேசர் உதவுகிறது. ரத்தப்போக்கை நிறுத்துகிறது இது மேலும் பார்வை மங்காமல் தடுக்கும். 

லேசர் சிகிச்சை பின்வரும் படிமுறைகளில் நடைபெறுகிறது –

  • கண்ணை மரத்துப்போகச் செய்ய நோயாளிக்கு லோக்கல் அனஸ்தீசியா சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. கண் சொட்டு மருந்து மூலம் பியூபிள்களை விரிவடையச் செய்து, அறுவை சிகிச்சையின் போது சிறப்பு கான்டாக்ட் லென்ஸ் மூலம் கண் இமைகளை திறந்து வைக்கின்றனர். 
  • லேசர் விழித்திரையில் ஃபோகஸ் செய்யப்பட்டு பின்னர் இயக்கப்படுகிறது. 
  • லேசரில் இருந்து வரும் வெப்பம், அசாதாரணமான ரத்தக் குழாய்களில் சிறிய தீக்காயங்களை உருவாக்குகிறது. ரத்தக்குழாய்களை அழித்து அடைத்தவுடன், அவற்றிலிருந்து ரத்தம் கசிவதில்லை. இதனால் விழித்திரையில் வீக்கம் குறைகிறது. 
  • சில சந்தர்ப்பங்களில், லேசர் ஃபோட்டோகோகிலேஷன் இரத்த நாளங்களை சுருக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது இது அவை மீண்டும் வளராமல் தடுக்க பயன்படுத்தப்படுகிறது. 

உகந்த முடிவுகளை அடைய, சிகிச்சையின் ஒன்றுக்கு மேற்பட்ட அமர்வுகள் தேவைப்படும். சிகிச்சை புறநோயாளி அடிப்படையில் செய்யப்படுகிறது, மற்றும் நோயாளி 2-3 மணி நேர கண்காணிப்பு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். 

நீரிழிவு ரெட்டினோபதிக்கான கண் ஊசிகள்

நீரிழிவு ரெட்டினோபதி நோயின் முன்னேற்றத்தை மந்தப்படுத்துவதற்கு நோயாளிக்கு ஆன்டி – விஇஜிஎஃப் அல்லது ஸ்டீராய்டு ஊசிகள் கொடுக்கப்படுகின்றன. சிகிச்சை பின்வரும் படிமுறைகளில் நடைபெறுகிறது – 

  • கண்களைச் சுற்றியுள்ள சருமம் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு ஷீட்டால் மூடப்படுகிறது. 
  • சிறிய கிளிப்கள் கண்களைத் திறந்த நிலையில் வைக்கப் பயன்படுத்தப்படுகிறது. 
  • கண்களை மரத்துப்போகச் செய்ய லோக்கல் அனெஸ்தீஷியா சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. 
  • ஒரு நுண்ணிய ஊசி கவனமாக கருவிழியில் வழிகாட்டப்பட்டு, மருந்து செலுத்தப்படுகிறது. 

பொதுவாக, கண்பார்வையை நிலைப்படுத்த மாதம் ஒரு முறை ஊசிகள் போடப்படுவது வழக்கம்.  பின்னர், முன்னேற்ற விகிதத்தைப் பொறுத்து ஊசிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. 

நீரிழிவு ரெட்டினோபதிகான அறுவை சிகிச்சை / விட்ரெக்டமி / விட்ரியோரெடினல் அறுவை சிகிச்சை

நீரிழிவு ரெட்டினோபதியின் அறுவை சிகிச்சை என்பது கண்ணிலிருந்து சில அல்லது அனைத்து விட்ரியஸ் ஹியூமர்களையும் அகற்றுகிறது. கண்ணில் ஒரு பெரிய அளவு இரத்தம் சேகரிக்கப்பட்டிருந்தால் அல்லது விழித்திரை விலகலை ஏற்படுத்தக்கூடிய அல்லது ஏற்கனவே ஏற்படுத்தி இருக்கும் விரிவான தழும்பு திசு இருந்தால் இது பரிந்துரைக்கப்படுகிறது. 

இந்த அறுவை சிகிச்சையில் கீழ்காணும் சிகிச்சைகளும் அடங்கும் – 

  • கண்களை மரத்துப்போகச் செய்ய நோயாளிக்கு ஜெனரல் அனெஸ்தீஷியா கொடுக்கப்படுகிறது, கண்களைத் திறந்திருக்க வைக்க ஒரு லிட் ஸ்பெகுலம் பயன்படுத்தப்படுகிறது. 
  • அறுவை சிகிச்சைக் கருவிகளை உட்செலுத்துவதற்கு ஒரு சிறப்பு பிளேடைப் பயன்படுத்தி ஸ்க்லெராவில் (கண்ணின் வெள்ளைப் பகுதி) ஒரு சிறிய வெட்டு செய்யப்படுகிறது. 
  • கண்ணை தெளிவாக பார்க்க நுண்ணோக்கி உலசெலுத்தப்படும். 
  • விழித்திரையில் உள்ள அனைத்து மங்கலான விட்ரியஸ் மற்றும் தழும்பு திசுக்களையும் நீக்க சிறிய கருவிகள் பயன்படுத்தப்படும். 
  • கண் அறுவை சிகிச்சை நிபுணர், கண் பார்வைக்குத் தேவையான மற்ற பழுதுகளை சரி செய்வார். உதாரணமாக, விழித்திரையில் கிழிதல் இருந்தால், அதை சரிசெய்ய லேசர் கருவி பயன்படுத்தப்படும். 
  • விட்ரியஸ்சானது சில வகையான திரவம், பொதுவாக சிலிக்கான் எண்ணெய் அல்லது உப்புநீரால் மாற்றப்படுகிறது. 
  • சில சந்தர்ப்பங்களில், அறுவை சிகிச்சை நிபுணர் விழித்திரையை சரியான இடத்தில் வைக்க கண்ணில் ஒரு வாயு குமிழை செலுத்தலாம். 
  • எல்லா ரிப்பேர்களும் முடிந்தவுடன், தையல்களால் வெட்டு மூடப்படும். பெரும்பாலும் தையல் கூட தேவைபபடுவதில்லை. 
  • கண் குணமாகும் போது நோய் தொற்று ஏற்படாமல் இருக்க கண் மீது ஒரு ஆன்டிபயாடிக் களிம்பு போடப்படும். 
  • கண்ணில் ஒரு பாட்ச் வைக்கப்படும் சில மணி நேரங்கள் உங்கள் உயிர்நாடிகளை நர்சிங் ஊழியர்கள் கண்காணிப்பார்கள். 

நோயின் தீவிரத்தைப் பொறுத்து முழுச் சிகிச்சைக்கும் சுமார் 1-2 மணி நேரம் எடுக்கும். புறநோயாளி அடிப்படையில் அறுவை சிகிச்சை நடைபெறுவதால், நோயாளி அன்றே டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

லேசர் சிகிச்சையின் ஆபத்துகள் & சிக்கல்கள்

நீரிழிவு ரெட்டினோபதி சிகிச்சைக்கான லேசர் சிகிச்சையுடன் தொடர்புடைய சாத்தியமான ஆபத்துகள் மற்றும் சிக்கல்கள் – 

  • இரவு அல்லது வெளிப்பார்வை குறைவது
  • கண்ணுக்குள் ரத்தக்கசிவு 
  • பார்வையில் மிதக்கும் காட்சிகள் 
  • கண்ணின் பின்புறம் லேசரால் செய்யப்பட்ட வடிவத்தைப் பார்ப்பது 
  • பார்வையின் மையத்திற்கு அருகில் சிறிய ஆனால் நிரந்தர குருட்டுப் புள்ளி 

ஒருவேளை சிகிச்சைக்குப் பின் பார்வை மோசமாகிவிட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 

கண் ஊசிகளின் ஆபத்துகள் & சிக்கல்கள்

இந்த முறையின் மூலம் ரத்தம் உறையும் அபாயம் அதிகரித்து, மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஸ்டிராய்டு மாத்திரைகளைப் பொருத்தவரையில், கண்களின் அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது குளுக்கோமாவுக்கு வழிவகுக்கும். 

விட்ரெக்டமி ஆபத்துகள் & சிக்கல்கள்

விட்ரெக்டமியில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அவ்வளவு பொதுவானவை அல்ல. அபாயங்கள் பொதுவாக நோயாளியின் வயது மற்றும் பிற மருத்துவ சிக்கல்களைப் பொறுத்தது. சில ஏற்படக்கூடிய ஆபத்துகள் மற்றும் சிக்கல்கள் – 

  • கண்ணில் ஏற்படும் தொற்று 
  • அதிக ரத்தப்போக்கு 
  • கண்களில் அதிகரிக்கும் அழுத்தம் (குளுக்கோமா)
  • புதிய விழித்திரை விலகல் 
  • லென்ஸ் சேதமாதல் 
  • கண்புரை உருவாகும் அபாயம் அதிகம் 
  • கண் அசைவுகளில் பிரச்னை 
  • ஒளிவிலகல் சக்தியில் மாற்றம் 

நீரிழிவு ரெட்டினோபதி சிகிச்சைக்குப் பிறகு என்ன நடக்கும்?

சிகிச்சைக்கு பின் உடனடியாக நீங்கள் லேசான அசௌகரியத்தையும், கண்களில் லேசான வலியையும் உணர்வீர்கள். விழித்தெழும் போது பார்வை மங்கலாவதற்கு வாய்ப்புண்டு. அது நிலைபட பல நாட்கள் ஆகும்.

மங்கலான பார்வை, ஒளியின் உணர்திறன், கண் வலி, எரிச்சல், கண்ணில் ரத்தம் வடிதல், மிதவைகள், நீர் நிறைந்த அல்லது வறண்ட கண்கள், தொற்று போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படும். இந்த தற்காலிக பக்க விளைவுகளைத் தீர்க்க மருத்துவர் உங்களுக்கு குறிப்பிட்ட அறிவுரைகளை வழங்குவார் மற்றும் மருந்துகளை பரிந்துரைப்பார். 

நீரிழிவு ரெட்டினோபதிக்கான ஆரம்ப நிலை சிகிச்சையின் நன்மைகள்

நீரிழிவு ரெட்டினோபதி சிகிச்சையின் ஆரம்பகால சிகிச்சையின் பங்கு கடுமையான பார்வை பிரச்சினைகளைத் தடுப்பதில் முக்கியமானது. முன்னேறிய நிலைகளில், குறிப்பாக புரோலிஃபரேடிவ் டயாபடிக் ரெட்டினோபதியில், பார்வை ஏற்கனவே பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் என்பதால் சேதத்தை சரிசெய்ய முடியாது. அறுவை சிகிச்சை மூலம் நோயின் முன்னேற்றத்தை தடுத்து, மேலும் பார்வை இழப்பை தடுக்கலாம். 

ஆரம்ப நிலை சிகிச்சை செலவு அம்சங்களைப் பொருத்தும் பயனுள்ளதாக இருக்கும். ஆன்டி-விஇஜிஎஃப் அல்லது ஸ்டீராய்டு ஊசிகளைப் போடுவது லேசர் சிகிச்சை மற்றும் விட்ரெக்டமியை விட செலவு குறைவானது. 

நீரிழிவு ரெட்டினோபதி நோய்க்கான பிற வாய்ப்புகள்

லேசர் சிகிச்சை மற்றும் விட்ரெக்டமி சிகிச்சை தவிர, நீரிழிவு ரெட்டினோபதிக்கு நேரடியாக கண்ணில் மருந்து செலுத்துவதன் மூலமும் சிகிச்சை பெறலாம். ஊசி மூலம் இரண்டு வகையான மருந்துகளை கொடுக்கலாம். 

ஆன்டி- விஇஜிஎஃப் மருந்து

இந்த ஊசியில், வாஸ்குலர் என்டோதீலியல் வளர்ச்சி காரணி (விஇஜிஎஃப்) தடுப்பான்கள் நீரிழிவு ரெட்டினோபதி நோயின் முன்னேற்றத்தை மந்தப்படுத்தி மேகுலாவின் வீக்கத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இது விழித்திரையில் புதிய இரத்த நாளங்களை உருவாக்க உடல் அனுப்பும் வளர்ச்சி சமிக்ஞைகளைத் தடுக்கிறது. 

ஆன்டி- விஇஜிஎஃப் மருந்து அவாஸ்டின், எய்லியா, லுசென்டிஸ் போன்ற வகைகளில் கிடைக்கிறது. நோயின் தீவிரத்தை பொறுத்து மருந்து தேர்வானது செய்யப்படுகிறது. பொதுவாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் நோயாளிக்கு 3-4 ஊசிகள் போடப்படுகின்றன மேலும் விளைவுகள் ஆப்டிகல் கோஹெரன்ஸ் டோமோகிராபி மூலம் கண்காணிக்கப்படுகின்றன. ஊசிகள் தீர்வுக்கு உதவவில்லை என்றால், நோயாளிக்கு பான்-ரெட்டினல் லேசர் ஃபோட்டோகொயாகுலேஷன் பரிந்துரைக்கப்படுகிறது. 

ஸ்டிராய்டுகள் 

நீரிழிவு ரெட்டினோபதிக்கு சிகிச்சையளிக்க ஊசிகள் மூலம் ஸ்டீராய்டு மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன. இது மாக்குலாவில் வீக்கத்தைக் குறைத்து பார்வையை நிலைப்படுத்தலாம். ஸ்டீராய்டு மருந்தை கண் சொட்டு மருந்துகளாகவோ, கண் ஊசியாகவோ, அல்லது உட்செலுத்தப்பட்ட கருவியாகவோ கொடுக்கலாம். 

இருப்பினும், கார்டிகோஸ்டீராய்டுகளைப் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க ஆபத்து உள்ளது, ஏனெனில் இது குளுக்கோமா மற்றும் கண்புரை நோய்களை உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். 

நீரிழிவு ரெட்டினோபதிக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் என்னவாகும்?

நீரிழிவு ரெட்டினோபதிக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால், விழித்திரையில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து நிலைமையை மோசமாக்கும். நாளங்களில் இருந்து ரத்தம் மற்றும் திரவம் விட்ரியஸ் ஹியூமஸ்சில் கசிவதால், விழித்திரை மேலும் சேதமடைகிறது, மேலும் மேகுலர் எடிமா உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. 

விழித்திரை தமனிகளின் சுருக்கம் விழித்திரை ரத்த ஓட்டத்தை குறைத்து உள் விழித்திரையின் நியூரான்களின் செயலிழப்பை ஏற்படுத்துகிறது. படிப்படியாக, பாதிப்பு வெளிப்புற விழித்திரையை சென்றடைகிறது, இது பார்வை செயல்பாடு மற்றும், இது இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு செல்களிலிருந்து விழித்திரையை பாதுகாக்கிற இரத்த விழித்திரை தடையை சீர்குலைக்கிறது. விழித்திரை இரத்தக்குழாய்களின் அடி சவ்வு தடிமனாகி, கேபிலரிகள் சிதைவடைந்து, நுண்ணிய அனூரிசிம்கள்களை ஏற்படுத்துகிறது. 

ஏற்கனவே இருக்கும் ரத்த நாளங்கள் சரியாக செயல்பட முடியாததால், விழித்திரையில் புதிய ரத்த நாளங்கள் உருவாகத் தொடங்கும். ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால், வளர்ச்சி முறையற்றதாகி, நாளங்கள் நலிவடைந்து விடுகின்றன. சிகிச்சையின்றி ரத்தக்குழாய்கள் விட்ரியஸ் ஹியூமரில் கலந்து விழித்திரையை அழித்து பார்வையை மங்கலாக்குகின்றன. ஃபைப்ரோவாஸ்குலர் பரவல் சில நேரங்களில் விழித்திரை விலகலுக்கும் வழிவகுக்கிறது. மேலும் வளர்ச்சி கண்ணின் முன்புற அறையில் இருந்தால் அசாதாரண இரத்த நாளங்கள் நியோவாஸ்குலர் கிளாக்கோமாவை ஏற்படுத்தலாம். 

இந்த நிலைமைகள் அனைத்தும் நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுக்கும். எனவே, நீரிழிவு ரெட்டினோபதிக்கு சரியான சிகிச்சையை நாடுவது பார்வையைப் பாதுகாப்பதற்கு மிகவும் முக்கியம். 

நீரிழிவு ரெட்டினோபதி சிகிச்சைக்குப் பிறகு குணமடைதல்

நீரிழிவு ரெட்டினோபதி சிகிச்சையிலிருந்து குணமடைதல் பயன்படுத்தப்படும் நுட்பத்தைப் பொறுத்து சற்று மாறுபடும். 

நீரிழிவு ரெட்டினோபதிக்கான லேசர் சிகிச்சைக்குப் பிறகு 

லேசர் ஃபோட்டோகோகுலேசன் சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக குணமடைதல் நோயாளியின் குணப்படுத்தும் திறன்களைப் பொறுத்து, பல வாரங்கள் எடுக்கலாம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அசௌகரியங்கள், மங்கலான பார்வை, கரும்புள்ளி போன்ற சில தற்காலிக பக்க விளைவுகள் ஏற்படும். 

இந்த பாதிப்புகள் தாமாகவே சரியாக ஒரு வாரம் கூட ஆகலாம். அவை தொடர்ந்து இருந்தால், இந்த பிரச்சனைகளை தீர்க்க உங்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும். 

விட்ரெக்டமிக்குப் பிறகு

கடுமையான நீரிழிவு ரெட்டினோபதி நோயாளிகளுக்கு விட்ரெக்டமி பரிந்துரைக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு பின் பல நாட்களுக்கு கண்களில் வீக்கம் இருக்கும். அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய குணமடைதலுக்கான அறிவுறுத்தல்கள் கூடுதல் சிகிச்சைகள் விட்ரெக்டமியுடன் இணைந்து செய்யப்பட்டதா இல்லையா என்பதைப் பொறுத்தது. உதாரணமாக, விட்டெக்டமியின் போது விழித்திரை விலகல் சிகிச்சையும் செய்யப்பட்டால், குமிழ் சரியான நிலையில் இருப்பதை அனுமதிக்க உங்கள் முகத்தை பல நாட்கள் கீழே வைக்குமாறு கேட்கப்படுவீர்கள். 

பூரண குணமடைய சுமார் 4 முதல் 6 வாரங்கள் ஆகலாம். இந்த காலம் முழுவதும் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக நீங்கள் பின்பற்ற வேண்டும். 

நீரிழிவு ரெட்டினோபதி சிகிச்சைக்குப் பின் பொதுவான குணமடைதலுக்கான குறிப்புகள்

  • பொதுவாக அறுவை சிகிச்சைக்கு பிறகு 1-2 நாட்கள் கழித்து வாகனம் ஓட்ட அனுமதி உண்டு. ஆனால், இதை மருத்துவர் உறுதி செய்ய வேண்டும். 
  • அறுவை சிகிச்சைக்குப் பிறகு 3 ம் நாளில் இருந்து குளிக்க அனுமதிக்கப்படுவீர்கள். ஆனால், கண்களில் நீர் புகாமல் இருக்க ஷவரில் குளிக்காமல் குளியல் தொட்டியை பயன்படுத்துவது நல்லது. 
  • கண்களுக்கு மேக்கப் போடுவதற்கும் மற்றும் உங்கள் கூந்தலில் அல்லது முகத்திற்கு கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவதற்கும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் காத்திருக்கவும். 
  • குறைந்தது 2-3 வாரங்களுக்கு, நீச்சல் அடிக்கக் கூடாது, அதன் பிறகும் நீச்சல் பயிற்சியின் போது கண்ணாடியைப் பயன்படுத்த வேண்டும். 
  • கண் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி கண் பட்டையை பயன்படுத்த வேண்டும். 
  • பகலில் தேவையான அளவு சன் கிளாஸ் அல்லது பரிந்துரைக்கப்பட்ட கண்ணாடிகளை அணிய வேண்டும். குறைந்தது ஒரு வாரமாவது தூங்கும் போது சிகிச்சை பெற்ற கண்ணை கண் கவசம் பயன்படுத்தி மூடவும். 
  • தூசி படியும் சூழல்களில் இருந்து விலகியிருக்க வேண்டும் மேலும் கண்களைத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். 
  • டிவி பார்ப்பது அல்லது கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படுகிறது, ஆனால் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை நீங்கள் தவறாமல் ஓய்வு எடுக்கிறீர்களா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். 

மருத்துவரின் ஆலோசனையைக் கேட்பது அறுவை சிகிச்சைக்குப் பின் சிக்கல்கள் ஏற்படுவதற்கான குறைந்தபட்ச வாய்ப்புகள் இருப்பதையும், குணமாதல் விரைவாக இருப்பதையும் உறுதி செய்யும். 

நீரிழிவு ரெட்டினோபதியின் முடிவுகள்

நீரிழிவு ரெட்டினோபதி சிகிச்சையால் ஒரே நேரத்தில் அனைத்து கண் பிரச்னைகளும் தீரும் என்று நீங்கள் எதிர்பார்த்தால், நீங்கள் தவறாக எண்ணுகிறீர்கள். நீரிழிவு ரெட்டினோபதி ஆரம்பிப்பதற்கு முன்பு இருந்த பார்வையை இந்த சிகிச்சை மீட்டெடுக்கும். 

பார்வையை முழுமையாக மீட்டெடுக்க பல வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஆகலாம். இருந்தாலும், உங்கள் பார்வை கணிசமாக சேதமடைந்திருந்தால், சிகிச்சையால் சேதத்தை சரிசெய்ய முடியாது. சிகிச்சைக்குப் பிறகும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், நிர்வகிக்கவும், மீண்டும் இ இந்த நிலை ஏற்படாமல் தடுக்கவும் மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். 

FAQ

நீரிழிவு ரெட்டினோபதி அறுவை சிகிச்சைக்கு எவ்வளவு நேரம் ஆகும்?

பொதுவாக, நீரிழிவு ரெட்டினோபதியின் அறுவை சிகிச்சைக்கு சுமார் 40 முதல் 60 நிமிடங்கள் வரை ஆகும். இதற்கான சராசரி நேரம் மயக்க மருந்து கண்களை மரத்துப்போக எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதைப் பொறுத்து சுமார் ஒரு மணி நேரம் ஆகும். கூடுதல் சிகிச்சை ஏதும் அளிக்கப்பட்டால் கால அளவும் வேறுபடலாம். 

இந்தியாவில் விட்ரக்டமி சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்?

நீரிழிவு ரெட்டினோபதி அறுவை சிகிச்சை அல்லது விட்ரெக்டமி சிகிச்சைக்கு இந்தியாவில் ரூ. 60,000 முதல் ரூ. 80,000 தோராயமாக. ஒவ்வொரு நோயாளியின் நிலையின் தீவிரம் மற்றும் பிற நிலைமைகளின் இருப்பைப் பொறுத்து செலவுகள் மாறுபடும். ஒரு மதிப்பீட்டைப் பெற, நீங்கள் பிரிஸ்டின் கேரை அழைத்து எங்கள் மருத்துவ ஒருங்கிணைப்பாளர்களுடன் பேசலாம். 

பிரிஸ்டின் கேர் நிறுவனம் நீரிழிவு ரெட்டினோபதி சிகிச்சைக்கான செலவை ஈடுகட்ட சுகாதார காப்பீட்டை ஏற்றுக்கொள்கிறதா?

ஆம், பிரிஸ்டின் கேர் நிறுவனம் அனைத்து சுகாதாரக் காப்பீடுகளையும் ஏற்றுக் கொள்கிறது. மேலும், நீரிழிவு ரெட்டினோபதி சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கும் உதவி வழங்குகிறோம். எங்கள் மருத்துவ ஒருங்கிணைப்பாளர்கள் அந்தந்த ஆவணங்களைத் திரட்டி உங்களுக்கு முழு சிகிச்சையையும் சிரமமின்றி செய்ய ஒப்புதல் மற்றும் உரிமை கோரும் செயல்முறையில் உங்களுக்கு உதவுவார்கள். 

(பிரிஸ்டின் கேரில் நீரிழிவு ரெட்டினோபதி சிகிச்சையின் வெற்றி விகிதம் என்ன?)

பிரிஸ்டின் கேர் நிறுவனத்தில், நீரிழிவு ரெட்டினோபதியின் வெற்றி விகிதம் 95% க்கும் அதிகமாக உள்ளது. மிகவும் அனுபவமிக்க கண் மருத்துவர்களை கொண்ட நாங்கள், அறுவை சிகிச்சையை துல்லியத்துடன் செய்ய நன்கு பயிற்சி பெற்றுள்ளோம். இதன் மூலம் வெற்றி விகிதங்களை மேம்படுத்த முடியும். 

நீரிழிவு ரெட்டினோபதி சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வருமா?

ஆம், நீரிழிவு ரெட்டினோபதி என்பது அறுவை சிகிச்சைக்குப் பிறகும் மீண்டும் வரலாம், ஏனெனில் இந்த நிலைக்கான அடிப்படைக் காரணத்தை குணப்படுத்த முடியாது. அறுவை சிகிச்சைக்குப் பிறகும் நீரிழிவு நோயை நிர்வகிக்கத் தவறினால், இந்த நிலை மீண்டும் முன்னேறலாம். 

பிரிஸ்டின் கேர் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய தொடர் சிகிச்சைகளை வழங்குகிறதா?

ஆம், எங்கள் அனைத்து நோயாளிகளுக்கும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய தொடர் ஆலோசனைகளை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம். நீங்கள் எங்கள் மருத்துவ ஒருங்கிணைப்பாளர்களை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும், மேலும் அவர்கள் உங்கள் வசதிக்கு ஏற்ப உங்கள் தொடர் நியமனத்தை திட்டமிடுவார்கள். 

Our Patient Love Us

Based on 5 Recommendations | Rated 5 Out of 5
  • PG

    Padmaja Gautam

    5/5

    I cannot thank Pristyn Care enough for the outstanding diabetic retinopathy treatment I received. The medical team's expertise and dedication to patient care were evident throughout the entire process. They thoroughly explained the treatment options and patiently addressed all my concerns. The treatment itself was precise and painless, and the nursing staff provided excellent post-treatment care. Pristyn Care's commitment to patient well-being and their seamless services are truly commendable. I am pleased with the successful outcome of the diabetic retinopathy treatment, and I highly recommend Pristyn Care to anyone seeking specialized eye care.

    City : BANGALORE
  • ST

    Santosh Thakur

    5/5

    Pristyn Care's diabetic retinopathy treatment was a lifeline for me. Their team's knowledge and compassion were reassuring. The treatment itself was seamless, and the results were beyond my expectations. I'm truly indebted to Pristyn Care for restoring my vision

    City : PUNE
  • PR

    Puneet Raina

    5/5

    I was diagnosed with diabetic retinopathy, and Pristyn Care's ophthalmologists guided me through the treatment journey. Their timely interventions and careful monitoring prevented the condition from worsening. I am thankful for Pristyn Care's eye care expertise.

    City : CHENNAI
  • AJ

    Anil Joshi

    5/5

    Diabetic retinopathy left me anxious about my eyesight, but Pristyn Care's treatment changed everything. Their specialized care and modern approach ensured my safety. The treatment was effective, and my vision improved significantly. Grateful for Pristyn Care's expertise

    City : HYDERABAD