நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்
location
Get my Location
search icon
phone icon in white color

அழைப்பு

Book Free Appointment

சிறுநீரக கற்களுக்கான ESWL சிகிச்சை

புற உடல் அதிரலை சிகிச்சை (ESWL) என்பது சிறுநீரக கற்களுக்கான அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சை முறையாகும். இது நோயாளிக்கு குறைந்தபட்ச அசௌகரியத்தை உறுதிசெய்து, குறுகிய காலத்தில் மீட்பதற்கான உத்தரவாதம் அளிக்கிறது. சிறுநீரகக் கல் சிகிச்சைக்கு, அனைவரும் அணுகக்கூடிய வகையில், செலவு குறைந்த கட்டணத்தில் மேம்பட்ட புற உடல் அதிரலை சிகிச்சை (ESWL) நடைமுறைகளை - ப்ரிஸ்டின் கேரில், நாங்கள் வழங்குகிறோம். உங்கள் மருத்துவ ஆலோசனையை இப்போதே பதிவு செய்யுங்கள்.

புற உடல் அதிரலை சிகிச்சை (ESWL) என்பது சிறுநீரக கற்களுக்கான அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சை முறையாகும். இது நோயாளிக்கு குறைந்தபட்ச அசௌகரியத்தை உறுதிசெய்து, குறுகிய காலத்தில் மீட்பதற்கான உத்தரவாதம் ... மேலும் வாசிக்க

anup_soni_banner
இலவசமாக மருத்துவரை அணுகவும்
Anup Soni - the voice of Pristyn Care pointing to download pristyncare mobile app
i
i
i
i
Call Us
We are rated
2 M+ மகிழ்ச்சியான நோயாளிகள்
700+ மருத்துவமனைகள்
45+ நகரங்கள்

To confirm your details, please enter OTP sent to you on *

i

45+

நகரங்கள்

Free Consultation

Free Consultation

Free Cab Facility

Free Cab Facility

No-Cost EMI

இல்லை செலவு EMI

Support in Insurance Claim

Support in Insurance Claim

1-day Hospitalization

1-day Hospitalization

USFDA-Approved Procedure

சான்றளிக்கப்பட்ட செயல்முறை USFDA

சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிக்க சிறந்த ESWL மருத்துவர்கள்

Choose Your City

It help us to find the best doctors near you.

அகமதாபாத்

பெங்களூர்

சண்டிகர்

சென்னை

டெல்லி

குவஹதி

ஹைதராபாத்

கான்பூர்

கொல்கத்தா

மும்பை

புனே

விஜயவாடா

விசாகபத்னம்

டெல்லி

குர்கான்

நொய்டா

அகமதாபாத்

பெங்களூர்

  • online dot green
    Dr. Ankit Kumar (Id6NCCAzQu)

    Dr. Ankit Kumar

    MBBS, MS-General Surgery, M.Ch-Urology
    13 Yrs.Exp.

    4.7/5

    13 + Years

    location icon Delhi
    Call Us
    6366-529-112
  • online dot green
    Dr. Srikanth Munna (KBJCSTb09N)

    Dr. Srikanth Munna

    MBBS, DNB, M.Ch-Urology
    18 Yrs.Exp.

    4.8/5

    18 + Years

    location icon Hyderabad
    Call Us
    6366-529-112
  • online dot green
    Dr. Praveen B (dv7S8UfzO1)

    Dr. Praveen B

    MBBS, DNB (GS), DNB (Uro)
    16 Yrs.Exp.

    4.7/5

    16 + Years

    location icon Bangalore
    Call Us
    6366-529-112
  • online dot green
    Dr. Sujoy Basak (xPtJCzPl7o)

    Dr. Sujoy Basak

    MBBS, MS, DrNB-Urologist
    16 Yrs.Exp.

    4.6/5

    16 + Years

    location icon Kolkata
    Call Us
    6366-529-112
  • புற உடல் அதிரலை சிகிச்சை (ESWL) என்றால் என்ன ?

    ESWL அல்லது புற உடல் அதிரலை சிகிச்சை என்பது சிறுநீரக கற்களை அகற்றுவதற்கான ஊடுருவல் அல்லாத சிகிச்சையாகும், இது அதிர்ச்சி அலைகள் மற்றும் ஊடுகதிர்கள் (எக்ஸ்ரே) மற்றும் ஊடொலி (அல்ட்ராசவுண்ட்) மூலம் கற்களை உடைத்து இயற்கையாக கரைந்து செல்ல உதவுகிறது. சிறிய அளவில் இருக்கும் சிறுநீரகக் கற்களுக்கு இந்த சிகிச்சை சிறப்பாகச் செயல்படுகிறது மற்றும் பல சந்தர்ப்பங்களில் பெரிய அறுவை சிகிச்சையின் தேவையை நீக்குகிறது.

    இந்த மருத்துவ செயல்முறை வெளிநோயாளர் அடிப்படையில் செய்யப்படுவதால், இதற்கு மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை மற்றும் இது ஒரு குறுகிய காலத்தில் மீண்டுவிடகூடிய சிகிச்சை  என்பது கூடுதல் சிறப்பம்சம். அதற்கும் மேல், அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் சிக்கல்களின் ஆபத்து நம்பமுடியாத அளவிற்கு குறைவு. இத்தகு பயனுள்ள சிகிச்சையைப் பெற பிரிஸ்டின் கேரை அணுகவும்.

    ESWL Surgery Cost Calculator

    Fill details to get actual cost

    i
    i
    i

    To confirm your details, please enter OTP sent to you on *

    i

    பிரிஸ்டின் கேர் - ஏன் புற உடல் அதிரலை சிகிச்சைக்கான சிறந்த சுகாதார மையம்?

    சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விரிவான சிகிச்சை அனுபவத்தை வழங்கும் இந்தியாவின் முன்னனி அறுவை சிகிச்சை மற்றும் பராமரிப்பு வழங்குநர்களில் பிரிஸ்டின் கேர் ஒன்றாகும்.

    சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் புற உடல் அதிரலை சிகிச்சை கிடைக்கச் செய்வதற்காக, நாட்டின் உயர்மட்ட மருத்துவமனைகளுடன் நாங்கள் புரிந்துணர்வு கொண்டுள்ளோம். உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தை நோயாளிகளுக்கு உறுதி செய்வதற்காக, எங்களின் சிகிச்சை கிடைக்கும் மருத்துவமனைகள் நன்கு பராமரிக்கப்பட்டு – அனைத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன உள்கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன.

    எங்கள் சிறுநீரக மருத்துவர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் அனைத்து நபர்களுக்கும் சிறப்பான மருத்துவ கவனிப்பை வழங்குகிறார்கள். நோயாளிகள் விரைவாக குணமடைவதை உறுதிசெய்யவும், சிகிச்சை முறையில் ஆபத்தான சிக்கல்கள் ஏற்படுவதற்கான மிகக் குறைவான சாத்தியத்தை உறுதிப்படுத்தவும், அவர்கள் நவீன சிகிச்சை தீர்வுகளை வழங்குகின்றனர். எனவே, உங்கள் சிறுநீரகக் கல் பிரச்சனைகளுக்கு பயனுள்ள தீர்வுகளைப் ப்ரிஸ்டின் கேரில் மட்டுமே  பெறுங்கள்.

    புற உடல் அதிரலை சிகிச்சையின் போது என்ன நடக்கிறது?

    நோய் கண்டறிதல்

    பொதுவாக, புற உடல் அதிரலை அறுவை சிகிச்சைக்கு முன் மருத்துவர்கள் பின்வரும் சோதனைகளை பரிந்துரைக்கின்றனர்:

    • இமேஜிங் சோதனைகள்
    • ஊடுகதிர் (எக்ஸ்-ரே),
    • வயிற்று ஊடொலி,
    • காந்த அதிர்வு அலை வரைவு (எம் ஆர் ஐ)
    • இரத்த யூரியா மற்றும் நைட்ரஜன் (BUN) சோதனை
    • இரத்த சோதனை
    • சிறுநீர் பகுப்பாய்வு

     

    சிகிச்சை முறைகள்

    அறுவை சிகிச்சைக்கு முன், நோயாளிக்கு முதுகெலும்பு மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் மயக்க மருந்தின் வகை அறுவை சிகிச்சை நிபுணரைப் பொறுத்தது.

    அடுத்து, நோயாளி தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டி அல்லது பஞ்சணை மீது படுக்க வைக்கப்படுகிறார். நீர் அல்லது பஞ்சணை சுற்றியுள்ள உறுப்புகள் சேதமடையாமல் தடுக்கிறது.

    இந்த செயல்பாட்டில், அறுவை சிகிச்சை நிபுணர் கல்லின் இருப்பிடத்தை  கண்டறிய ஊடுகதிர் (எக்ஸ்ரே) அல்லது வயிற்று ஊடொலி போன்ற பல்வேறு இமேஜிங் சோதனைகளைப் பயன்படுத்துவார்.

    கல்லின் துல்லிய இருப்பிடத்தை  கண்டறிந்ததும், கல்லை நுண்ணிய துண்டுகளாக உடைக்க தொடர்ச்சியான உயர் ஆற்றல் ஒலி அலைகளை வெளியிடுகிறார் அறுவைசிகிச்சை நிபுணர். அறுவைசிகிச்சை நிபுணர்கள் ஒலி அலைகளின் சக்தி மற்றும் இடைவெளிகளை அதற்கேற்ப சரிசெய்து கல்லை சிறய துண்டுகளாக உடைக்கிறார்கள்.

     கல் சிறிய துண்டுகளாக உடைந்தவுடன், அவை உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றன.

    இந்த மருத்துவ செயல்முறை பொதுவாக 30-45 நிமிடங்கள் ஆகும், இது கல்லின் அடர்த்தி, நோயாளியின் மருத்துவ ஆரோக்கியம் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணரின் நிபுணத்துவம் ஆகியவற்றைப் பொறுத்தது.

    புற உடல் அதிரலை சிகிச்சை அனைத்து வகையான சிறுநீரக கற்களுக்கும் பயனுள்ளதாக இருக்காது மேலும் கற்களை முழுவதுமாக உடைக்க பல அமர்வுகள் தேவைப்படலாம். ஒரு பெரிய கல் ஏற்பட்டால், அறுவை சிகிச்சை நிபுணர் சிறுநீர்க்குழாய் ஸ்டென்ட்டைச் செருகும் சிகிச்சை முறையையும் தேர்வு செய்யலாம். ஒரு ஸ்டென்ட் – கற்களின் சீரான இயக்கத்திற்காக சிறுநீர்க்குழாயின் பத்தியை பெரிதாக்குகிறது மற்றும் கல்லை வெளியேற்றும் போது வலியைக் குறைக்க உதவுகிறது.

    புற உடல் அதிரலை சிகிச்சைக்கு தயார் ஆவது எப்படி ?

    அனைத்து சிறுநீரக மருத்துவர்களும், புற உடல் அதிரலை சிகிச்சைக்கு முன் குறிப்பிட்ட வழிமுறைகளை வழங்குவதன் மூலம் சிகிச்சைமுறைக்குத் தயாராக உதவுவார்கள்.

    புற உடல் அதிரலை சிகிச்சை செயல்முறைக்கான பொதுவான தயாரிப்பு குறிப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன…

    •     அறுவை சிகிச்சை செய்த இடத்தைச் சுற்றி அசௌகரியத்தைத் தவிர்க்க, தளர்வான ஆடைகளை அணியுங்கள்.
    •     புற உடல் அதிரலை அறுவை சிகிச்சைக்கு முன், உங்கள் சிறுநீரக மருத்துவரிடம், தாங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் மற்றும் மற்ற உடல் ஆரோக்கிய நிலைமைகள் பற்றியும் தெரிவிக்கவும்.
    •     அறுவை சிகிச்சைக்கு முன், புகையிலை அல்லது வேறு எதையும் புகைப்பதைத் தவிர்க்கவும்.
    •     மயக்க மருந்து தொடர்பான ஒவ்வாமை ஏதேனும் இருப்பின் அதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் முன்னரே பேசுங்கள்.
    •     அறுவைசிகிச்சைக்கு 8 முதல் 9 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுவது அல்லது குடிப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது மயக்க மருந்துகளின் விளைவுகளை தாமதப்படுத்தும்.

    Pristyn Care’s Free Post-Operative Care

    Diet & Lifestyle Consultation

    Post-Surgery Follow-Up

    Free Cab Facility

    24*7 Patient Support

    புற உடல் அதிரலை அறுவை சிகிச்சைக்கு பின் மீண்டுவருதல் எப்படி ?

    புற உடல் அதிரலை அறுவை சிகிச்சைக்குப் பின், குணமாகி மீண்டு வருவதற்கு பொதுவாக ஒரு வாரம் ஆகும். ஆனால், அறுவைசிகிச்சைக்குப் பிறகு 2 முதல் 3 நாட்களுக்குள் நோயாளிகள் தங்கள் அன்றாடப் பணிகளைத் தொடரலாம்.

    சிகிச்சைக்குப் பின் மீட்பு செயல்முறையை விரைவுபடுத்த, சில குறிப்புகள்:

    •     கடினமான செயல்களைத் தவிர்க்கவும். இருப்பினும், குறைந்தபட்ச உடல் உழைப்புச் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
    •     உங்கள் குடிநீர் நுகர்வை அதிகரிக்கவும்.
    •     உங்கள் உணவில் அதிக நார்ச்சத்து சேர்த்துக்கொள்ளவும்.
    •     அறுவைசிகிச்சைக்குப் பிறகு, சில வாரங்களுக்கு மிகவும் காரமான அல்லது அதிக மாமிச புரதம் கொண்ட உணவை சாப்பிட வேண்டாம்.
    •     ஏதேனும் அசாதாரண அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.

    புற உடல் அதிரலை (ESWL) அறுவை சிகிச்சையின் நன்மைகள் என்ன?

    புற உடல் அதிரலை சிகிச்சை என்பது ஒப்பீட்டளவில் புதிய மருத்துவ சிகிச்சை செயல்முறையாகும். இது பாரம்பரிய சிகிச்சை முறைகளுடன் ஒப்பிடும்போது குறைவான அபாயங்கள் மற்றும் சிக்கல்களை கொண்டுள்ளது.

    புற உடல் அதிரலை அறுவை சிகிச்சையின் சில நன்மைகள் பின்வருமாறு:

    •     இதில் வெட்டுக்கள் அல்லது தையல்கள் இல்லை
    •     இதனால் இரத்தப்போக்கு ஏற்படாது
    •     வழக்கமான அறுவை சிகிச்சைகளை விட மீட்பு காலம் மிகக் குறைவு
    •     குறுகிய காலம் மட்டுமே மருத்துவமனையில் தங்குதல்
    •     வெளிநோயாளி எனும் அடிப்படையில் சிகிச்சை செய்யப்படுவது
    •     ஒரு வாரத்திற்குள் நீங்கள் தினசரி நடவடிக்கைகளைத் தொடரலாம்

    புற உடல் அதிரலை சிகிச்சை குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

    இச்சிகிச்சையால் ஏற்பட வாய்ப்புள்ள பக்க விளைவுகள் என்ன?

    இந்த செயல்முறை கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. இருப்பினும், சில நோயாளிகளுக்கு சிகிச்சைக்குப் பிறகு சில நாட்களுக்கு சிறுநீரில் இரத்தம் மற்றும் லேசான வயிற்று வலியைக் கவனிக்கலாம். பொதுவாக , இந்த அறிகுறிகளை சமாளிக்க மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கின்றனர்.

    இந்த சிகிச்சையின் போது எனக்கு வலி ஏற்படுமா?

    இல்லை. இது ஒரு ஊடுருவல் இல்லாத சிகிச்சையாகும், இது மயக்க மருந்துகளின் கீழ் செய்யப்படுகிறது. எனவே, சிகிச்சையின் போது ஒரு நோயாளி வலி அல்லது அசௌகரியத்தை உணருவது சாத்தியமில்லை.

    இந்த சிகிச்சையின் மூலம் எந்த அளவு சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிக்க முடியும்?

    5 மிமீ அளவை விட பெரிய சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிக்க புற உடல் அதிரலை சிகிச்சை முறை சிறந்தது. இந்த கற்கள் தாங்களாகவே கரைந்து சென்றுவிட வாய்ப்பில்லாதவை மற்றும் இதனை நீக்குவதற்கு மருத்துவ தலையீடு தேவைப்படும்.

    கர்ப்பிணிப் பெண்கள் இச்சிகிச்சைக்கு உட்படுத்த முடியுமா?

    இல்லை, முடியாது. இந்த செயல்முறை குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் அதிக தீவிரம் கொண்ட ஒலி அலைகளைப் பயன்படுத்துகிறது.

     

    green tick with shield icon
    Content Reviewed By
    doctor image
    Dr. Ankit Kumar
    13 Years Experience Overall
    Last Updated : August 1, 2024

    Our Patient Love Us

    Based on 12 Recommendations | Rated 5 Out of 5
    • VD

      Vaagdevi Dasgupta

      5/5

      My ESWL surgery for kidney stone at Pristyn Care was a positive and transformative experience. The medical team was highly skilled and caring, making me feel at ease from the beginning. The surgery procedure was quick, and the post-operative care was exceptional. Thanks to Pristyn Care, I am now relieved of the excruciating pain caused by kidney stones. I can't express enough gratitude for their expertise and commitment to patient well-being. I highly recommend Pristyn Care for anyone in need of a successful kidney stone treatment.

      City : AHMEDABAD
    • HB

      Haripriya Bharati

      5/5

      Pristyn Care's ESWL treatment was life-changing for me. Dealing with kidney stones was incredibly painful, but their urology team was incredibly supportive and understanding. They recommended ESWL as the best option for my kidney stone size and location. The procedure was performed with great care, and Pristyn Care's post-operative care was exceptional. Thanks to them, I am now free from the kidney stone pain and feeling much better.

      City : PATNA
    • SA

      Shravan Atrey

      5/5

      I had a kidney stone, and Pristyn Care's ESWL treatment was a success. The urologists were experienced, and the procedure was non-invasive. The recovery was quick, and I felt supported throughout. I'm thankful to Pristyn Care for their expertise in managing kidney stones.

      City : BANGALORE
      Doctor : Dr. Praveen B
    • BS

      Brijmohan Sarkar

      5/5

      Pristyn Care's ESWL treatment was efficient in breaking down my kidney stone. The urologists provided thorough pre-operative counseling, and the procedure went smoothly. I experienced no complications and appreciated Pristyn Care's professionalism in managing my kidney stone.

      City : CHANDIGARH
    • IB

      Indrani Baghel

      5/5

      Pristyn Care's ESWL surgery for kidney stone was an absolute success. The medical team was attentive and supportive, ensuring my comfort and well-being. The procedure was quick and painless, and the post-operative care was top-notch. Thanks to Pristyn Care, I am now free from the discomfort and have not faced any kidney stone recurrence. I highly recommend their expertise and personalized care for anyone who need kidney stone treatment.

      City : CHENNAI
      Doctor : Dr. Yuvaraj
    • TA

      Tara Atrey

      5/5

      Choosing Pristyn Care for my ESWL surgery for kidney stone was the best decision I made. The medical team was highly professional and made me feel at ease throughout the process. The surgery was performed with precision, and the recovery was smoother than I anticipated. Thanks to Pristyn Care, I am now living without the distress caused by kidney stones. I highly recommend their expertise in ESWL surgery for anyone seeking a positive and effective kidney stone treatment.

      City : BHUBANESWAR