நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்
location
Get my Location
search icon
phone icon in white color

அழைப்பு

Book Free Appointment

இந்தியாவில் ஹைமனோபிளாஸ்டி அறுவை சிகிச்சை

ஹைமெனோபிளாஸ்டி அல்லது ஹைமன் ரிப்பேர் அறுவை சிகிச்சை, ஒரு அழகு சார்ந்த அறுவை சிகிச்சை என்றாலும், வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்திற்காக பெரும்பாலும் பெண்களால் நாடப்படுகிறது. நீங்கள் ஹைமோனோபிளாஸ்டி அறுவை சிகிச்சைக்கு ஒரு கிளினிக் அல்லது மருத்துவமனையைத் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் பிரிஸ்டின் கேரின் மகளிர் நல மருத்திவார்களைத் தொடர்பு கொண்டு, உத்தரவாதததுடன் அந்தரங்கம் மற்றும் நம்பகமான கருவளைய (ஹைமென்) மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை பெறலாம்.

ஹைமெனோபிளாஸ்டி அல்லது ஹைமன் ரிப்பேர் அறுவை சிகிச்சை, ஒரு அழகு சார்ந்த அறுவை சிகிச்சை என்றாலும், வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்திற்காக பெரும்பாலும் பெண்களால் நாடப்படுகிறது. நீங்கள் ஹைமோனோபிளாஸ்டி அறுவை சிகிச்சைக்கு ... மேலும் வாசிக்க

anup_soni_banner
இலவசமாக மருத்துவரை அணுகவும்
cost calculator
Anup Soni - the voice of Pristyn Care pointing to download pristyncare mobile app
i
i
i
i
Call Us
We are rated
2 M+ மகிழ்ச்சியான நோயாளிகள்
700+ மருத்துவமனைகள்
45+ நகரங்கள்

To confirm your details, please enter OTP sent to you on *

i

45+

நகரங்கள்

Free Consultation

Free Consultation

Free Cab Facility

Free Cab Facility

No-Cost EMI

இல்லை செலவு EMI

Support in Insurance Claim

Support in Insurance Claim

1-day Hospitalization

1-day Hospitalization

USFDA-Approved Procedure

சான்றளிக்கப்பட்ட செயல்முறை USFDA

ஹைமனோபிளாஸ்டிக்கான சிறந்த மருத்துவர்கள்

Choose Your City

It help us to find the best doctors near you.

பெங்களூர்

சென்னை

டெல்லி

ஹைதராபாத்

மும்பை

புனே

விசாகபத்னம்

டெல்லி

குர்கான்

நொய்டா

அகமதாபாத்

பெங்களூர்

  • online dot green
    Dr. Nikita Trehan (px6aL5CFKE)

    Dr. Nikita Trehan

    MBBS, DNB, MNAMS Diploma in Laparoscopic Surgery (Kochi, Germany)
    25 Yrs.Exp.

    4.9/5

    25 Years Experience

    location icon F-1, Gate, No 2, Garden Ln, Kalindi Colony, New Delhi, Delhi 110065
    Call Us
    6366-527-977
  • online dot green
    Dr. Monika Dubey (L11rBuqCul)

    Dr. Monika Dubey

    MBBS, MS - Obstetrics & Gynaecology
    23 Yrs.Exp.

    4.5/5

    23 Years Experience

    location icon Pristyn Care Clinic, Noida
    Call Us
    6366-527-977
  • online dot green
    Dr. Sujatha (KrxYr66CFz)

    Dr. Sujatha

    MBBS, MS
    18 Yrs.Exp.

    4.5/5

    21 Years Experience

    location icon Pristyn Care Clinic, Anna Nagar, Chennai
    Call Us
    6366-447-414
  • online dot green
    Dr. Samhitha Alukur (83t9oYCWt5)

    Dr. Samhitha Alukur

    MBBS, DGO, DNB, FRM, DMAS, FMAS
    10 Yrs.Exp.

    4.5/5

    10 Years Experience

    location icon Pristyn Care Clinic, Hyderabad
    Call Us
    6366-421-482

ஹைமனோபிளாஸ்டி என்றால் என்ன?

ஹைமெனோபிளாஸ்டி (hymenoplasty) அல்லது ஹைமெனோராஃபி (hymenorrhaphy) அல்லது ஹைமென் ரிபேர் அறுவை சிகிச்சை (hymen Repair Surgery) என்பது கிழிந்த ஹைமென் (hymen) கருவளையத்தை அறுவை சிகிச்சை மூலம் மீட்டெடுப்பதாகும். இந்த அறுவை சிகிச்சை துளையிடப்பட்ட அல்லது உடைந்த ஹைமெனின் ஒரு அழகு சார்ந்த பழுதுபார்ப்பாகும், மேலும் இது சில நேரங்களில் ரிவெர்ஜீனைசேஷன் என்றும் அழைக்கப்படுகிறது. சமீப ஆண்டுகளில், இந்தியாவில் 20-30 சதவீதம் ஹைமெனோபிளாஸ்டி கேஸ்கள் அதிகரித்துள்ளன.

பிறப்புறுப்பின் கீழ் பகுதியில் அமைந்திருக்கும் மெல்லிய சவ்வான ஹைமென் என்பது பெரும்பாலும் ஒரு பெண்ணின் கன்னித்தன்மைக்கு சான்றாக கருதப்படுகிறது. ஆனால், அது எப்போதும் உண்மை அல்ல. பெரும்பாலும், உடலுறவுக்கு முன்பே ஹைமென் கிழிந்துவிடுகிறது, சில நேரங்களில் கடுமையான விளையாட்டில் பெண்கள் ஈடுபடுவதன் காரணமாகவும் மற்றும் சில நேரங்களில் குறிப்பிட்ட உடற்பயிற்சி முறைகளில் ஈடுபடும் போதும் ஹைமென் கிழிந்துவிடுகிறது. 1,000 பெண் குழந்தைகளில் ஒருவர் குறைபாடுடைய ஹைமென் (இம்பெர்ஃபோரேட் ஹைமன்) என்ற நிலையில் பிறக்கிறார்கள் என்றும் மருத்துவப் பதிவுகள் கூறுகின்றன. ஆயினும், இந்த உண்மைகளைப் பற்றி மிகவும் குறைவாகவே அறியப்படுகிறது அல்லது பேசப்படுகிறது. 

ஹைமெனோபிளாஸ்டியில், ஹைமெனின் உடைந்த எச்சங்கள் அல்லது கிழிந்த துண்டுகள் ஒன்றாக தைக்கப்பட்டு ஒரு புதிய ஹைமன் மீண்டும் உருவாக்கப்படுகிறது.

cost calculator

ஹைமனோபிளாஸ்டி Surgery Cost Calculator

Fill details to get actual cost

i
i
i

To confirm your details, please enter OTP sent to you on *

i

இந்தியாவில் ஹைமனோபிளாஸ்டி அறுவை சிகிச்சைக்கான சிறந்த மருத்துவமனை

சிறந்த ஹைமனோபிளாஸ்டி சிகிச்சையைப் பெற விரும்புகிறீர்களா?

ஹைமனோபிளாஸ்டி சிகிச்சையை பாதுகாப்பாக, மலிவானக, அதே சமயத்தில் நம்பகமாக செய்துகொள்ள ஒரு கிளினிக்கை நீங்கள் தேடுகிறீர்களா? நமது நிபுணத்துவம் வாய்ந்த பெண் மகளிர் நல மருத்துவர்களுடன் கலந்தாலோசித்து ஹைமனோபிளாஸ்டியைப் பற்றி புரிந்து கொண்டு ஹைமன் ரிப்பேர் அறுவை சிகிச்சை செய்துகொள்ளுங்கள்.

ஹைமன் ரிப்பேர் அறுவை சிகிச்சை என்பது மிகவும் தனிப்பட்ட விஷயம் என்று நாங்கள் புரிந்து கொள்கிறோம். அதனால், ஹைமனோபிளாஸ்டி அறுவை சிகிச்சைக்காக எங்களை அணுகும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தீவிர ரகசியத்தன்மை மற்றும் தனியுரிமையை உறுதி செய்கிறோம். ஹைமன் ரிப்பேர் அறுவை சிகிச்சையின் சென்சிட்டிவான தன்மையையும், இந்த அறுவை சிகிச்சை ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக இருக்கக்கூடியது என்பதன் முக்கியத்துவத்தையும் எங்கள் மகளிர் நல மருத்துவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட எங்கள் போர்டு-சான்றிதழ் பெற்ற மகளிர் நல மருத்துவர்கள் ஆரம்ப ஆலோசனையில் இருந்து தொடங்கி, ஹைமன் மறுசீரமைப்பு செய்ய சரியான வழியை உறுதி செய்யவும் உங்களுக்கு உதவுவார்கள். நீங்கள் உங்கள் பாலியல் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தை தேடினால், நீங்கள் பிரிஸ்டின் கேருடன் ஒரு படி மேலே செல்லலாம். இன்றே எங்கள் மகளிர் நல மருத்துவர்களுடன் உங்கள் ஆலோசனையை அட்டவணைப்படுத்த ஒரு சந்திப்பை முன்பதிவு செய்யுங்கள், மேலும் ஹைமெனோபிளாஸ்டி அறுவை சிகிச்சை உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை எவ்வாறு கொண்டு வரும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பாலியல் அல்லது கலாச்சார நம்பிக்கைகளுக்காக ஹைமென் ரிபேர் சிகிச்சையை நாடுகிறீர்கள் என்றால், முழுமையான முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு, மற்றும் ரகசியம் காப்பதில் நம்பகத்தன்மையை நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.

ஹைமனோபிளாஸ்டி எப்படி வேலை செய்கிறது?

ஹைமெனோபிளாஸ்டி சிகிச்சை பொதுவாக கிழிந்த அசல் ஹைமனுக்குப் பதிலாக ஒரு மெல்லிய அடுக்கு அல்லது புதிய திசு மென்படலத்தை உருவாக்குகிறது. பிறப்புறுப்புத் திறப்பின் ஒரு மெல்லிய அடுக்கைப் பிரித்தெடுத்து பிறப்புறுப்புத் திறப்பில் நுட்பமாக தைத்து இந்த நடைமுறை செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் முதல் உடலுறவின் போது பிறப்புறுப்பு துவாரத்தில் உள்ள மெல்லிய திசுக்கள் வாஸ்குலர் ஆகி அசல் ஹைமன் போல ரத்தம் வெளியேறும்.

ஒரிஜினல் ஹைமனின் கிழிந்த டேக்களை பிரித்தெடுத்தல், தைத்தல், மறுகட்டுமானம் செய்தல் போன்றவற்றின் மூலமும் ஹைமனோபிளாஸ்டி செய்யலாம். ஒட்டப்பட்ட ஹைமென் ஒரு அசல் ஹைமென் போன்று தோன்றாவிட்டாலும் ஒரு அசல் ஹைமென் செய்வது போலவே உடலுறவில் இரத்தம் வடியும்.

ஹைமனோபிளாஸ்டிக்கு எப்படி தயார் ஆவது?

உங்கள் மகளிர் நல மருத்துவரும் நோயாளி ஒருங்கிணைப்பாளரும் ஹைமன் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்குத் தயாராகும் வழிகளை உங்களுக்கு விளக்குவார்கள். மருத்துவர் உங்கள் ஹைமெனோபிளாஸ்டிக்கு முன் உடல் பரிசோதனை செய்யவும் வாய்ப்புள்ளது. ஹைமன் ரிப்பேர் அறுவை சிகிச்சை நிபுணர் உங்களை செய்யச் சொல்லக்கூடிய வேறு சில விஷயங்கள்:

  • அறுவை சிகிச்சைக்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்பு பிறப்புக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். 
  • அறுவை சிகிச்சைக்கு முன் ஏதேனும் ஒவ்வாமைகள் அல்லது நீங்கள் தொடர்ந்து எடுத்து வரும் மருந்துகளை பரிசோதித்துக் கொள்ளுங்கள், ஏனெனில் ஐப்யூபுரூஃபன் அல்லது இரத்த மெலிதலுக்கான மருந்துகள் போன்ற சில மருந்துகள் அறுவை சிகிச்சைக்கு முன் நிறுத்தப்பட வேண்டும், ஏனெனில் அவற்றால் அதிக இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. 
  • அறுவை சிகிச்சைக்கு முன் தேவையான நடவடிக்கை என்பதால், அறுவை சிகிச்சை நாளில் உங்கள் வயதுக்கான சான்றை எடுத்துச் செல்ல வேண்டும். 
  • அறுவை சிகிச்சை அனஸ்தீஷியாவின் கீழ் செய்யப்படுகிறது என்பதால், அறுவை சிகிச்சைக்கு 4-6 மணி நேரத்திற்கு முன்பு நீங்கள் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில், அது கடுமையான மயக்க மருந்து தொடர்பான சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
  • அறுவை சிகிச்சைக்குப் பிறகு லேசான ரத்தக்கசிவு அல்லது புள்ளிகள் ஏற்பட்டால் பயனுள்ளதாக இருக்க ஒரு ஜோடி தளர்வான காட்டன் ஆடைகள் மற்றும் மென்மையான சானிட்டரி பேட்களை எடுத்துச் செல்லுங்கள்.

Pristyn Care’s Free Post-Operative Care

Diet & Lifestyle Consultation

Post-Surgery Free Follow-Up

FREE Cab Facility

24*7 Patient Support

ஹைமனோபிளாஸ்டியின் நோக்கம் என்ன? ஹைமனோபிளாஸ்டி ஏற்பட என்ன காரணம்?

ஹைமனோபிளாஸ்டியின் நோக்கம், அறுவை சிகிச்சை மூலம் ஹைமனை மீட்டெடுத்தல் அல்லது மீண்டும் உருவாக்குதல் ஆகும். முதல் முறையாக உடலுறவு கொள்வது போன்ற உணர்வை இந்த அறுவை சிகிச்சை அளிக்கிறது. மேலும் இந்த அறுவை சிகிச்சை மூலம் பெண்களுக்கு தன்னம்பிக்கையும், இளமை உணர்வும் அதிகரிக்கிறது.

பெண்களுக்கு ஹைமனோபிளாஸ்டி ஏன் தேவை?

சரியான ஹைமென் அல்லது கன்னித்தன்மை என்பது திருமணத்தைப் பொருத்தமட்டில் ஒரு பெண்ணுக்கு தேவைப்படும் ஒரு குணமாகும். ஒரு பெண் திருமணம் செய்து கொள்கிற நபரைத் தவிர வேறு ஒரு ஆணிடம் தனது கன்னித்தன்மையை இழந்து விட்டால், அதன் பின் ஏற்படும் உணர்வு ரீதியான, உடல் ரீதியான, உளவியல் ரீதியான விளைவுகள் பெரும்பாலும் ஆரோக்கியமானதாக இருக்காது. ஒரு பெண் தன் கணவன் அல்லது குடும்பத்தார் தன்னை ஒழுக்கங்கெட்டவளாக அல்லது இழிவானவளாக கருதுவதை மறைக்க அல்லது புதைக்க தன் போலியான கன்னித்தன்மையை பயன்படுத்துகிறாள். ஹைமனோபிளாஸ்டி சிகிச்சையை பெண்கள் நாடுவதற்கு இதுவே மிகவும் பொதுவான காரணமாகும்.

பெண்கள் ஹைமன் ரிப்பேர் அறுவை சிகிச்சை செய்ய விரும்புவதற்கு இன்னொரு காரணம், தங்கள் திருமண இரவில் தங்கள் கணவர்களுக்கு தங்கள் கன்னித்தன்மையை அன்பளிப்பாக அளிப்பதுதான். இது முக்கியமாக ‘பெண்மையின் அடையாளம்’ என்று பார்க்கப்படுகிறது ஹைமனோபிளாஸ்டி (hymenoplasty) செய்யும் பிரிஸ்டின் கேரின் மகளிர் நல மருத்துவர்கள், “பல பெண்கள் திருமணத்திற்கு முன்பே தங்கள் துணையுடன் உடல் ரீதியாக நெருங்கிப் பழகியிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் இன்னும் தங்கள் முதல் இரவு சிறப்பாக மற்றும் மறக்க முடியாததாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்று கூறுகின்றனர். இது சந்தோஷத்தையும், த்ரில்லையும் சேர்த்து, சங்கமத்தை மறக்க முடியாததாக மாற்றும் என்று நினைக்கிறார்கள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு ஹைமன் ரிப்பேர் ஒரு ஆறுதலாக உள்ளது. இளம் வயதிலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, இருண்ட கடந்த காலத்தை புதைக்கவோ அல்லது இந்த அத்தியாயத்தை ரகசியமாக வைத்திருக்கவோ விரும்பும் பெண்கள், பெரும்பாலும் உடைந்துபோன கருவளையத்தை மறுசீரமைக்க சிகிச்சை பெறுகிறார்கள். அவர்கள் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கும்போது மோசமான நினைவுகள் இல்லாமல் தொடங்க விரும்புகிறார்கள்.

ஹைமனோபிளாஸ்டிக்கு பிறகு குணமடைதல்

ஹைமெனோபிளாஸ்டி என்பது ஒரு புறநோயாளி செயல்முறையாகும், எனவே நோயாளிக்கு ஒரு நீட்டிக்கப்பட்ட மருத்துவமனை தங்கத் தேவையில்லை. நோயாளி குறைந்தது 2-3 மணி நேரம் கண்காணிப்பில் வைக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். 

நோயாளி டிஸ்சார்ஜ் ஆன பிறகு 4-5 நாட்களுக்கு போதுமான ஓய்வில் இருக்க வேண்டும். உடலில் எந்த அழுத்தமும், ஸ்ட்ரெஸ்சும் கொடுக்காமல் அன்றாட வேலைகளைத் தொடர வேண்டும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஒரு நோயாளி முழுமையாக குணமடைய பொதுவாக 5-6 வாரங்கள் ஆகலாம். மருத்துவர் குணமடையும் செயல்முறையில் அவருக்கு வழிகாட்டவும், குணமடையும் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கூறவும் வாய்ப்பு உள்ளது

  • அறுவை சிகிச்சை செய்த இடத்தில் அல்லது பிரப்புறுப்பைச் சுற்றி வலி அல்லது தொற்று ஏற்படுவதைத் தடுக்க பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பிறப்புறுப்பு பகுதியை சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்திருக்க வேண்டும். சிறுநீர் கழித்த பின் கழுவி, நன்றாக ஒற்றி விட வேண்டும்.
  • அறுவை சிகிச்சைக்கு பின் 6-8 வாரங்கள் வரை அல்லது காயம் முழுமையாக குணமாகும் வரையிலும் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
  • அறுவை சிகிச்சைக்கு பின் வலி அல்லது வீக்கம் இருந்தால், ஐஸ் பேக் அல்லது சூடான கம்ப்ரஸ் பயன்படுத்தி அந்த பகுதியைத் தேற்றவும்.
  • டாம்பன்கள் அல்லது மாதவிடாய் கோப்பைகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி பயன்படுத்த வேண்டாம்.
  • அறுவை சிகிச்சை செய்யும் இடத்தில் ரத்தக் கசிவு, எரிச்சல், அரிப்பு, தொடர் வீக்கம் போன்றவை ஏற்பட்டால், தாமதிக்காமல், மகளிர் நல மருத்துவரிடம் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஹைமெனோபிளாஸ்டிக்குப் பிறகு குணமடைதல் பொதுவாக தடையற்றதாக இருக்கும், மேலும் பெரும்பாலான நோயாளிகளுக்கும் இது பொருந்துவதாக உள்ளது. இருப்பினும், அதிக அழுத்தப்பட்ட பிறப்புறுப்புத் திசுக்களைக் கொண்ட பெண்களுக்கு, குணமடையும் காலம் சற்று நீண்டதாகவும், சற்று வலி நிறைந்ததாகவும் இருக்கலாம்.

இந்தியாவில் ஹைமெனோபிளாஸ்டி சிகிச்சைக்கு ஆகும் செலவு எவ்வளவு?

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஹைமனோபிளாஸ்டி சிகிச்சைக்கு ஆகும் செலவு ரூ. 20,000 முதல் ரூ. 30,000. அறுவை சிகிச்சைக்கான உண்மையான செலவு பல காரணிகளை ஆராய்ந்து கணக்கிடப்படுகிறது. இந்த காரணிகள் இணைந்து அறுவை சிகிச்சையின் மொத்த செலவு மற்றும் ஒவ்வொரு தனிநபரும் ஆகும் செலவில் சிறியது முதல் பெரிய மாறுபாடுகளை ஏற்படுத்தலாம்.

அறுவை சிகிச்சைக்கான செலவுகள் இவ்வாறு வேறுபடுவதற்குக் காரணமாக இருக்கும் சில பொதுவான காரணிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

  • சிகிச்சை செய்ய விரும்பப் படும் நகரம் மற்றும் மருத்துவமனை
  • அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மயக்க மருந்து நிபுணரின் கட்டணங்கள்
  • கொடுக்கப்படும் அனெஸ்தீஷியாவின் வகை
  • அறுவை சிகிச்சைக்கு முன் செய்யப்படும் நோயறிதல் சோதனைகளுக்கான கட்டணம்
  • செய்யப்படுகிற செயல்முறையின் வகை
  • நோயாளியின் உடல்நிலை மற்றும் மருத்துவ வரலாறு

பிரிஸ்டின் கேரின் best Gynecologistடை அணுகி ஹைமெனோபிளாஸ்டிக்கான செலவு மதிப்பீட்டைப் பெறுங்கள்.

ஹைமெனோபிளாஸ்டியைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்தியாவில் ஹைமனோபிளாஸ்டி சட்டப்பூர்வமானதா?

ஆம். ஹைமெனோபிளாஸ்டி அல்லது ஹைமன் ரிப்பேர் அறுவை சிகிச்சை இந்தியாவில் சட்டப்பூர்வமானது. பெரும்பாலும் இந்த சிகிச்சை பெண் ஜெனிடல் மியூட்டிலேஷனோடு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் இந்த நடைமுறை அதிலிருந்து வேறுபடுகிறது. ஹைமெனோபிளாஸ்டி இந்தியா முழுவதும் பல மகளிர் நல கிளினிக்குகளில் செய்யப்படுகிறது.

ஹைமனோபிளாஸ்டி அறுவை சிகிச்சை வலிநிறைந்ததா?

லோக்கல் அனஸ்தீஷியாவின் கீழ் செய்யப்படுவதால் ஹைமெனோபிளாஸ்டி வலியை ஏற்படுத்தாது. பல பெண்களும் தூக்க மருந்தை உட்கொண்டு அறுவை சிகிச்சையின் போது தூங்குவதை தேர்வு செய்கின்றனர். இருப்பினும், அனஸ்தீஷியாவின் விளைவு மறைந்த பிறகு, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய ஆரம்ப வாரத்தில் நீங்கள் லேசான அசௌகரியத்தை உணரலாம்.

ஹைமன் ரிப்பேர் அறுவை சிகிச்சை பாதுகாப்பானதா?

ஆம். ஹைமன் ரிப்பேர் அறுவை சிகிச்சை மிகவும் பாதுகாப்பான சிகிச்சை முறையாகும். இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்கின்றனர். இந்த அறுவை சிகிச்சை முறை பிரபலமாகி வருவதே ஹைமெனோபிளாஸ்டியின் பாதுகாப்பைப் அதிகம் உறுதிப்படுத்துகிறது. இந்த அறுவை சிகிச்சையில் குறிப்பிடத்தக்க ஆபத்துகள் மற்றும் சிக்கல்கள் எதுவும் இல்லை.

ஹைமனோபிளாஸ்டி சிகிச்சை கன்னித்தன்மையை மீட்டெடுக்குமா?

ஹைமன் என்பது ஒரு உடல் உறுப்பு. மாறாக கன்னித்தன்மை என்பது ஒரு சமூகக் கருத்து. எனவே, ஒன்றை மற்றொன்றைக் காட்டுவதாக இருக்க முடியாது. இருப்பினும், இந்தியா உட்பட பல சமூகங்களில், காலங்காலமாக ஒரு பெண்ணின் கன்னித்தன்மையின் அறிகுறியாக ஒரு தீண்டப்படாத ஹைமன் கருதப்படுகிறது. ஹைமெனோபிளாஸ்டி அறுவை சிகிச்சையால் கன்னித்தன்மையை மீட்டெடுக்கப்படுவதில்லை. இருப்பினும், இது ஒரு புதிய ஹைமெனை உருவாக்குகிறது, அது இதுவரை கிழியாத ஹைமெனைப் போன்ற தோற்றத்தையும் உணர்வையும் ஏற்படுதுகிறது.

ஹைமனோபிளாஸ்டி உங்களை இறுக்கமாக்குகிறதா?

இந்த அறுவை சிகிச்சை தொழில்நுட்ப ரீதியாக பிறப்புறுப்பின்எந்த பகுதியையும் இறுக்கமாக்காது. ஹைமெனோபிளாஸ்டி என்பது தனிப்பட்ட தேவைகள், விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்காக அவர்களின் முழு பிறப்புறுப்பு நிலையை மீட்டெடுக்கும் ஒரு அறுவை சிகிச்சையாகும். அறுவை சிகிச்சையின் இறுதி விளைவு அழியாத ஹைமென் அடுக்கை உருவாக்குவது ஆகும்.

ஹைமனோபிளாஸ்டிக்குப் பிறகு எனக்கு இரத்தக் கசிவு ஏற்படுமா?

இல்லை. அந்த உத்தரவாதத்தை யாராலும் தர முடியாது. இயற்கையான சரியான ஹைமன் கொண்டு கூட ரத்தப்போக்கை உறுதி செய்ய முடியாது. சில பெண்களுக்கு, முதல் உடலுறவின் போது, ஹைமன் உடைக்கப்படலாம், சில பெண்களுக்கு, அது விரிந்து பின்னர் உடைக்கப்படலாம் அல்லது அவ்வாறு நிகழாமல் போகலாம். இருப்பினும், ஹைமெனோபிளாஸ்டி மூலம், நீங்கள் ஒரு இறுக்கமான மடிப்பு போன்ற விளைவைப் பெறுவீர்கள் என்று உறுதியளிக்கலாம், இது நீங்கள் / உங்கள் துணை எதிர்பார்க்கும் துல்லியமான ஒன்றாக இருக்கலாம்.

நான் ஹைமனோபிளாஸ்டி செய்து கொண்டால் அது என் துணைக்குத் தெரியுமா?

இல்லை. ஹைமன் ரிப்பேர் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் தையல்கள் மிகவும் நேர்த்தியாகவும் கரையக்கூடியவையாகவும் உள்ளன. ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள், இயற்கையான மற்றும் அறுவை சிகிச்சை மூலம் மறுசீரமைக்கப்பட்ட ஹைமனுக்கு இடையே காணக்கூடிய எந்த வித்தியாசமும் இருக்காது. இந்த அறுவை சிகிச்சை எந்தவித தழும்புகள் மற்றும் காயங்களை ஏற்படுத்தாது.

ஹைமனோபிளாஸ்டி செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

ஒரு ஹைமன் ரிப்பேர் செயல்முறைக்கு பொதுவாக 30 நிமிடங்களுக்கு மேல் எடுக்காது. இருப்பினும், முன்னேறப்படுகளுக்கான நேரம், அனஸ்தீசியா, செயல்முறைக்கான நேரம், மற்றும் அனஸ்தீசியா தளர்வதற்கு ஆகும் நேரம் என ஆரம்பத்திலிருந்து முடிவு வரை 3-4 மணி நேரங்கள் வரை எடுக்கலாம்.

என் திருமணத்திற்கு எவ்வளவு காலத்திற்கு முன் நான் ஹைமனோபிளாஸ்டி செய்துகொள்ள வேண்டும்?

ஹைமனோபிளாஸ்டிக்குப் பிறகு முழுமையான குணமடைய சுமார் 4-6 வாரங்கள் எடுக்கும். எனவே, உங்கள் அறுவை சிகிச்சையை திட்டமிடுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம், இதன் மூலம் அறுவை சிகிச்சை செய்த பகுதி குணமடைய அனுமதிக்கும் நேரத்தை நீங்கள் பெறுவீர்கள்.

ஹைமன் மறுசீரமைப்பு நடவடிக்கையால் தழும்புகள் ஏற்படுமா?

இல்லை, ஹைமன் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை எந்த விதமான தழும்புகளையும் விட்டுவைப்பதில்லை.

நான் ஹைமன் ரிப்பேர் கிட்டைப் பயன்படுத்தலாமா? ஹைமன் ரிப்பேர் கிட் பயனுள்ளதாக இருக்கிறதா?

ஹைமன் ரிப்பேர் கிட் பயன்படுத்துவது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆயினும், ஹைமன் ரிப்பேர் கிட்டின் விளைவு, ஹைமன் ரிப்பேர் அறுவை சிகிச்சையிலிருந்து வித்தியாசப்படுகிறது. இரண்டுக்கும் நன்மைகள், தீமைகள், பலன்கள் மற்றும் குறைபாடுகள் உண்டு. இரண்டில் ஒன்றை நீங்கள் முடிவு செய்ய விரும்பினால், எது உங்களுக்கு அதிக நன்மை பயக்கும், எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உங்கள் மகளிர் நல மருத்துவரிடம் ஒரு ஆலோசனை பெறுவது நல்லது.

ஹைமனோபிளாஸ்டிக்கு மருத்துவமனையில் தங்கவேண்டுமா?

இல்லை, ஹைமனோபிளாஸ்டிக்கு மருத்துவமனை தங்க வேண்டிய அவசியமில்லை. அறுவை சிகிச்சை என்பது ஒரு டேகேர் முறை, எனவே அன்றைய தினமே வீட்டுக்குச் செல்லலாம்.

ஹைமனோபிளாஸ்டிக்கு பிறகு நான் எப்போது உடலுறவு கொள்ளலாம்?

ஹைமனோபிளாஸ்டிக்குப் பிறகு நீங்கள் குறைந்தது 4-6 வாரங்கள் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில், நீங்கள் பிறப்புறுப்பிற்குள் டாம்பன்கள் அல்லது மாதவிடாய் கோப்பைகள் நுழைக்க கூடாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

இந்தியாவில் ஹைமனோபிளாஸ்டி சிகிச்சைக்கு ஆகும் செலவு என்ன?

இந்தியாவில் ஹைமனோபிளாஸ்டி சிகிச்சைக்கு 15,000 முதல் 30,000 ரூபாய் வரை செலவாகும்.

ஹைமனோபிளாஸ்டி செயல்முறைக்குத் தகுதியானவர் யார்?

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிற மற்றும் ஹைமன் மீண்டும் பெற முயற்சி செய்கிற ஒருவரே ஹைமெனோபிளாஸ்டி அறுவை சிகிச்சைக்கு தகுதியானவர். 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு ஹைமனோபிளாஸ்டி சிகிச்சை பரிந்துரைக்கப்படுவதில்லை.

ஹைமனோபிளாஸ்டியின் வெற்றி விகிதம் என்ன?

நிபுணத்துவம் வாய்ந்த மகளிர் நல மருத்துவர் ஒருவர் ஹைமெனோபிளாஸ்டி செய்து, அறுவை சிகிச்சைக்கு முன்பும், பின்பும், நோயாளி ஆலோசனையைசரியாகப் பின்பற்றினால், வெற்றி விகிதம் 98% வரை இருக்கும்.

View more questions downArrow
green tick with shield icon
Medically Reviewed By
doctor image
Dr. Nikita Trehan
25 Years Experience Overall
Last Updated : December 21, 2024

Our Patient Love Us

Based on 122 Recommendations | Rated 5 Out of 5
  • RD

    Ruchi Dubey

    5/5

    good

    City : BANGALORE
  • VL

    venkada lakshmi

    5/5

    Good

    City : COIMBATORE
  • SK

    Sarbjeet kaur

    4.5/5

    I always suggest pristyn care to my friends

    City : CHANDIGARH
  • PU

    Pushpalatha

    4/5

    My treatment was handled well. consultation was confidential and I didn't experience any difficulty.

    City : HYDERABAD
  • KS

    Kalavati Sagar

    5/5

    The care I received during my hymenoplasty at Pristyn Care was top-notch. The doctors were incredibly proficient, the staff was friendly, and the care coordinators were always there to help. The respect for my privacy was admirable.

    City : RANCHI
  • SD

    Shakti Dhoni

    5/5

    I had the best experience with pristyn care ever in my life. From consultation to the treatment, they take care of everything properly. Thanks to the entire team of pristyn care.

    City : VISAKHAPATNAM