நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்
location
Get my Location
search icon
phone icon in white color

அழைப்பு

Book Free Appointment

முழங்கால் மாற்று - நோய் கண்டறிதல், அறுவை சிகிச்சை & மீட்பு: (Knee Replacement in Tamil)

பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றுவதன் மூலம் முழங்கால் மூட்டின் இயக்கத்தை மீட்டெடுத்தல் மேம்பட்ட மற்றும் குறைந்த பட்ச ஊடுருவல் மூலம் முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அல்லது பகுதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தவும். பாதுகாப்பான மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மிகவும் அனுபவம் வாய்ந்த எலும்பு அறுவை சிகிச்சை நிபுணருடன் தொடர்பு கொள்ள Pristyn Care உடன் இன்றே உங்கள் சந்திப்பை முன்பதிவு செய்யுங்கள்.

பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றுவதன் மூலம் முழங்கால் மூட்டின் இயக்கத்தை மீட்டெடுத்தல் மேம்பட்ட மற்றும் குறைந்த பட்ச ஊடுருவல் மூலம் முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அல்லது பகுதி மூட்டு மாற்று ... மேலும் வாசிக்க

anup_soni_banner
இலவசமாக மருத்துவரை அணுகவும்
Anup Soni - the voice of Pristyn Care pointing to download pristyncare mobile app
i
i
i
i
Call Us
We are rated
2 M+ மகிழ்ச்சியான நோயாளிகள்
700+ மருத்துவமனைகள்
45+ நகரங்கள்

To confirm your details, please enter OTP sent to you on *

i

45+

நகரங்கள்

Free Consultation

Free Consultation

Free Cab Facility

Free Cab Facility

No-Cost EMI

இல்லை செலவு EMI

Support in Insurance Claim

Support in Insurance Claim

1-day Hospitalization

1-day Hospitalization

USFDA-Approved Procedure

சான்றளிக்கப்பட்ட செயல்முறை USFDA

Best Doctors For Knee Replacement

Choose Your City

It help us to find the best doctors near you.

பெங்களூர்

போபால்

டெல்லி

ஹைதராபாத்

இந்தூர்

ஜெய்ப்பூர்

கொச்சி

மீரட்

மும்பை

நாக்பூர்

புனே

ராஞ்சி

வதோதரா

விசாகபத்னம்

டெல்லி

குர்கான்

நொய்டா

அகமதாபாத்

பெங்களூர்

  • online dot green
    Dr. D. K. Das (7GhFwYGWni)

    Dr. D. K. Das

    MBBS, M.S.(Ortho), M.CH.(Ortho), FIJRS (UK, Germany)
    23 Yrs.Exp.

    4.8/5

    23 + Years

    location icon Dr DK Das - Pristyn care Ortho & Joint Care Centre
    Call Us
    6366-528-300
  • online dot green
    Dr Sourabh Chachan (xBdD2Q9LOS)

    Dr Sourabh Chachan

    MBBS, MS (Ortho), MRCS (Edinburgh) FMISS (Seoul), FIASA (USA), FACS (USA) Robotic & Endoscopic Spine Surgeon
    12 Yrs.Exp.

    4.8/5

    12 + Years

    location icon Delhi
    Call Us
    6366-528-300
  • online dot green
    Dr. Rahul Grover (W0CtEqDHs6)

    Dr. Rahul Grover

    MBBS, MS-Orthopedics, DNB-Orthopedics
    10 Yrs.Exp.

    4.9/5

    10 + Years

    location icon Pristyn Care Clinic, Delhi
    Call Us
    6366-528-300
  • online dot green
    Dr. Pradeep Choudhary (iInTxtXANu)

    Dr. Pradeep Choudhary

    MBBS, MS-Orthopedics
    33 Yrs.Exp.

    4.8/5

    33 + Years

    location icon Indore
    Call Us
    6366-528-300
  • முழங்கால் மாற்று என்றால் என்ன? (Knee Replacement in Tamil)

    முழங்கால் மாற்று அல்லது முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை என்பது சேதமடைந்த முழங்காலை மாற்றுவதற்கான ஒரு அறுவை சிகிச்சை முறையாகும். இந்த நடைமுறையில், முழங்கால் தொப்பி உட்பட முழங்கால் மூட்டு எலும்புகளின் முனைகளை மூடுவதற்கு பிளாஸ்டிக் மற்றும் உலோக பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடுமையான முழங்கால் மூட்டுவலி அல்லது கடுமையான முழங்கால் காயம் உள்ள ஒருவர் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படலாம். முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையின் நோக்கம் சேதமடைந்த முழங்கால் மூட்டை மறுகட்டமைப்பதாகும். கீல்வாதம், முடக்கு வாதம் மற்றும் அதிர்ச்சிகரமான மூட்டுவலி போன்ற முழங்கால் மூட்டைப் பாதிக்கும் பல்வேறு வகையான கீல்வாதம் உள்ளன.

    முழங்கால் மாற்று Surgery Cost Calculator

    Fill details to get actual cost

    i
    i
    i

    To confirm your details, please enter OTP sent to you on *

    i

    உங்களுக்கு முழங்கால் மாற்று சிகிச்சை தேவை என்பதற்கான அறிகுறிகள் என்ன?

    முழங்கால் மூட்டுவலி காலப்போக்கில் உருவாகலாம் மற்றும் உங்கள் அன்றாட பணிகளை சாதாரண முறையில் மேற்கொள்வதை கடினமாக்குகிறது. நீங்கள் சிரமத்தை அனுபவிக்கும் நேரத்தில், சேதம் ஏற்கனவே முழங்காலில் ஏற்படலாம். உங்களுக்கு முழங்கால் மாற்று தேவை என்பதைக் குறிக்கும் முக்கிய அறிகுறிகள்:

    1. நாள்பட்ட வலி

      முழங்காலில் ஏற்படும் வலி பல்வேறு வழிகளில் வந்து உங்களை பாதிக்கலாம். வலி எப்போதும் கடுமையானதாகவோ அல்லது கூர்மையாகவோ இருக்க வேண்டியதில்லை. நீங்கள் ஏதேனும் உடல் செயல்பாடுகளைச் செய்தபின் அல்லது குறைந்த தூரம் நடந்த பிறகு ஏதேனும் வலியை அனுபவித்தால், உங்கள் முழங்காலில் ஏதோ பிரச்சனை இருப்பதாகவும், உங்களுக்கு முழங்கால் மாற்று தேவைப்படலாம் என்றும் இது எச்சரிக்கிறது. மற்ற நேரங்களில், வலி
      ​​
      மிகவும் கடுமையாக இருக்கும், அது உங்களை தூங்க விடாமல் தடுக்கிறது.

    2. மட்டுப்படுத்தப்பட்ட இயக்கம்

      நீங்கள் உட்காருவதில் சிரமம் இருந்தால் அல்லது உங்கள் முழங்கால் வளைக்க மறுத்தால், இது உங்களுக்கு முழங்கால் மாற்று தேவை என்பதற்கான பொதுவான அறிகுறியாகும். இயக்கத்தின் போது மூட்டைப் பிடிப்பது முழங்காலின் எலும்புத் துண்டின் சேதம் அல்லது சிதைவைக் குறிக்கும்.

    3. வாழ்க்கை முறை செயல்பாடுகலில் உள்ள வரம்புகள்

      நீங்கள் காலையில் அல்லது வெறுமனே தோட்டத்தில் உலாச் சென்றாலும், உங்கள் இயக்கத்தின் திறனில் வரம்புகளைக் கண்டால், அது கவலையை ஏற்படுத்துகிறது. முழங்கால் மோசமடைந்து, உங்கள் வாழ்க்கை முறை செயல்பாடுகளை நிறுத்துவதற்கு முன், நீங்கள் எலும்பியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

    முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறந்த எலும்பியல் மருத்துவமனை

    பிரிஸ்டின் கேர், நவீன முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை வழங்குகிறது, இது நவீன மற்றும் குறைந்த அளவு ஆக்கிரமிப்பு நுட்பத்தின் உதவியுடன் செய்யப்படுகிறது, அதாவது ஆர்த்ரோஸ்கோபி. நமது சிகிச்சை மையங்கள் நவீன அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் நவீன உள்கட்டமைப்புடன் சிறந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வழங்குகின்றன. 

    பிரிஸ்டின் கேர் நிறுவனத்தில் நாங்கள் அதிக அனுபவம் வாய்ந்த எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்களைக் கொண்டிருக்கிறோம். அவர்கள் அதி நவீன ஆர்த்ரோஸ்கோபியைச் செய்கிறார்கள் மற்றும் எந்தச் சிக்கலும் இல்லாமல் விரிவான முழங்கால் மாற்று சிகிச்சையை வழங்குகிறார்கள், வெற்றிகரமான முடிவுகளுக்கு அதிநவீன மற்றும் பயனுள்ள முழங்கால் மாற்று சிகிச்சைகளைச் செய்வதில் எங்கள் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். 

    மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின் கூறுகள் என்ன?

    முழங்கால் மூட்டு பொருத்துதல் என்பது சேதமுற்ற அல்லது பாதிக்கப்பட்ட முழங்கால் மூட்டுக்கு பதிலாக செயற்கை உறுப்பு பொருத்துதல் ஆகும். நடமாடுவதில் உள்ள பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், எந்த வலியோ, அசௌகரியமோ இல்லாமல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சுதந்திரமாக செல்லவும் செயற்கை முழங்கால் மூட்டு பொருத்துதல்கள் உதவுகின்றது. 

    மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் மூன்று முக்கிய கூறுகள் உள்ளன

    • தொடை உறுப்பு: இம்பிளாண்ட்டின் இந்த பகுதி நேரடியாக தொடை எலும்புடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் நீங்கள் முழங்கால் மூட்டை வளைக்கும் போது பட்டெல்லார் கூறு சரிய அனுமதிக்கும் க்ரூவ் இதில் உள்ளது.
    • திபியல் கூறு: இது ஒரு தட்டையான இரண்டு-துண்டு உலோகம் மற்றும் இம்பிளாண்ட்டின் பிளாஸ்டிக் பகுதி ஆகும், இது திபியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பிளாஸ்டிக் பாகம் கால் முன்னெலும்பு மற்றும் தொடை எலும்பு உறுப்புகளுக்கு இடையே ஒரு குஷன் போல செயல்படுகிறது.
    • பட்டேல்லார் கூறு: இது ஒரு பிளாஸ்டிக் டோம் வடிவ வடிவ கூறு ஆகும், இது பட்டெல்லாவின் வடிவத்துடன் பொருந்துமாறு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. 

    இம்பிளான்ட் செய்யப்படும் பிளாஸ்டிக் கூறுகள் பாலி எத்திலீனாலாலும், உலோக கூறுகள் பொதுவாக கோபால்ட்-குரோமியம், டைட்டானியம், சிர்க்கோனியம் மற்றும் நிக்கல் போன்றவற்றாலும் செய்யப்படுகின்றன. மூட்டு மாற்று உறுப்புகளை அவை எதைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன என்பதன் அடிப்படையில் நான்கு வகைகளாக வகைப்படுத்தலாம்:

    • பிளாஸ்டிக்கின் மீது உலோகம்
    • பிளாஸ்டிக்கின் மீது பீங்கான்
    • பீங்கானின் மீது பீங்கான்
    • உலோகத்தின் மீது உலோகம்

    Pristyn Care’s Free Post-Operative Care

    Diet & Lifestyle Consultation

    Post-Surgery Free Follow-Up

    Free Cab Facility

    24*7 Patient Support

    மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் என்ன நடக்கிறது?

    நோய் கண்டறிதல் 

    எலும்பு தொடர்பான பிரச்னைகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் எலும்பு மருத்துவர் நிபுணத்துவம் பெற்றவர். அவர் முழுமையாக நோயை கண்டறிய சோதனை செய்கிறார் இதில்-

    • நேரடி பரிசோதனையும் அடக்கம், அதன் மூலம் மருத்துவர் முழங்கால் மூட்டு வலி, செயல்பாடு, அறிகுறிகள் போன்றவற்றை மதிப்பிடுவார். 
    • இந்த நிலைக்கான காரணத்தை தீர்மானிக்க குடும்பம் மற்றும் மருத்துவ வரலாறு பற்றிய விரிவான உரையாடல்
    • எக்ஸ்ரே, எம். ஆர். ஐ, போன்ற பரிசோதனைகள் முழங்கால் மூட்டு செயலிழப்பின் அளவைக் கண்டறிய பரிந்துரைக்கப்படுகிறது

    மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முறை

    ஆர்த்ரோஸ்கோபிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்ய சுமார் 1 முதல் 3 மணி நேரம் ஆகும், பொதுவாக ஜெனரல் அல்லது ஸ்பைனல் அநெஸ்தீஷியா கொடுத்து செய்யப்படலாம். அறுவை சிகிச்சையின் போது, முழங்காலின் முன்பகுதியின் மீது அறுவை சிகிச்சை நிபுணர் வெட்டு ஒன்றை ஏற்படுத்தி மூடுசில்லை வெளிப்படுத்துகிறார். பின்னர், மூட்டின் சேதமடைந்த பாகங்களை அகற்றிவிட்டு, முழங்கால் ப்ரோஸ்தெட்டிக்கை நிலைப்படுத்துகின்றனர். பொதுவாக, ஒரு சிறப்பு எலும்பு, ‘சிமெண்ட்’ மற்றும் ஒரு பிளாஸ்டிக் ஸ்பேசர், முழங்கால் இம்பிளாண்ட்டின் மற்றும் ஒரு குருத்தெலும்பு போல் செயல்படும் மற்றும் மூட்டு இயக்கத்தின் போது உராய்வு குறைக்கும் எலும்புகள் இடையே வைக்கப்படும். பின்னர் காயத்தை மூடி, தையல் அல்லது கிளிப்களை பயன்படுத்தி, காயத்திற்கு கட்டு இடுவார்கள். அறுவை சிகிச்சை மிகக் குறைந்த பட்ச அளவு ஆக்கிரமிப்போடு செய்யப்படுவதால், இரத்தப்போக்கு மிகக் குறைவு.

     



    மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராவது எப்படி?

    மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஒரு முக்கிய சிகிச்சையாகும், எனவே அறுவை சிகிச்சைக்கு முன்பு நீங்கள் நன்கு தயாராக வேண்டும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான முன் ஏற்படுகள் இரண்டு நிலைகளில் செய்யப்படுகிறது: மருத்துவ மற்றும் வீட்டு முன்னேற்பாடு.

    மூட்டு மாற்று சிகிச்சைக்கு முன் செய்யப்படும் மருத்துவ முன்னேர்பாடுகளில் அடங்குபவை:

    • உங்கள் மருத்துவ வரலாற்றை உங்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணரிடம் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் ஏற்கனவே ஏதேனும் மருத்துவ நிலைமைகள்,வியாதிகள் மற்றும் அவற்றுக்காக நீங்கள் தற்போது எடுத்துக் கொள்ளும் மருந்துகள் பற்றி உங்கள் எலும்பு மருத்துவருக்கு தெரியப்படுத்துங்கள். நீங்கள் ஆஸ்பிரின், ஸ்டீராய்டுகள், ஓப்பியாய்டுகள் மற்றும் இதுபோன்ற பிற மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தால், அறுவை சிகிச்சைக்கு ஒரு வாரத்திற்கு முன்பும் பின்பும் அவற்றின் பயன்பாட்டைக் குறைக்கும்படியோ அல்லது நிறுத்தும்படியோ உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் உங்களிடம் கூறலாம்.
    • அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் புகையிலைப் பயன்பாட்டை நீங்கள் முழுமையாகத் தவிர்க்க வேண்டியிருக்கலாம், நிகோடின் குணப்படுத்தும் செயல்முறையை மெதுவாக்குகிறது மற்றும் நோயாளிக்கு டிவிடி (டீப் வெயின் த்ராம்போசிஸ்) போன்ற அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சிக்கல்களை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
    • உங்கள் மருத்துவ வரலாற்றை உங்கள் எலும்பியல் மருத்துவரிடம் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், நீங்கள் அறுவை சிகிச்சைக்கு உகந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறீர்களா என்பதை உங்கள் வழக்கமான மருத்துவரிடம் சரிபார்க்க வேண்டும்.
    • ஆல்கஹால் அனஸ்தீசியாவிற்கு எதிராக செயல்பட்டு அறுவை சிகிச்சையின் போது சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே அறுவை சிகிச்சைக்கு முன் குறைந்தது 2-3 நாட்களுக்கு மது அருந்துவதை நிறுத்திவிட வேண்டும்.
    • காய்ச்சல், ஜலதோஷம், ஃப்ளூ போன்ற திடீர் நோய்கள் ஏற்பட்டால், உடனடியாக உங்கள் எலும்பு மருத்துவருக்குத் தெரியப்படுத்துங்கள், அதன்படி அவர் அறுவைசிகிச்சை செயல்முறையை மாற்றி அமைக்கக் கூடும்.

    இந்தியாவில் மூட்டு மாற்று சிகிச்சைக்கான சராசரி செலவு

    இந்தியாவில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவு ஒரு முழங்காலுக்கு 1,80,000 ரூபாய் மற்றும் இரண்டு முழங்காலுக்கும் 4,50,000 ரூபாய் வரை ஆகும். நீங்கள் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள நினைத்தால், நீங்கள் பின்வரும் காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும், அதன் அடிப்படையில் அறுவை சிகிச்சைக்கான செலவு மாறுபடலாம்.

    • அறுவை சிகிச்சையில் பொருத்தப் பயன்படுத்தப்படும் முழங்கால் மூட்டு வகை
    • முழங்கால் மாற்று அறுவைசிகிச்சையின் வகை – மொத்த முழங்கால் மாற்று அல்லது பகுதி முழங்கால் மாற்று
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான பொதுவான செலவுகள்
    • அறுவை சிகிச்சை நிபுணரின் அனுபவம் மற்றும் ஃபீஸ்
    • அறுவை சிகிச்சை அணுகுமுறை – குறைந்தபட்ச ஊடுருவல் அல்லது பாரம்பரிய திறந்த அறுவை சிகிச்சை
    • கொடுக்கப்பட்ட மயக்க மருந்து வகை
    • நோயாளியின் வயது மற்றும் நீரிழிவு நோய், கல்லீரல் அல்லது நுரையீரல் நோய் போன்ற இணை நோய்கள்
    • நீங்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நகரம்
    • ஃபிசியோதெரபி, புனர்வாழ்வு மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகான தேவைப்படும் பராமரிப்பு
    • காப்பீட்டுப் பாதுகாப்பு

    ப்ரிஸ்டின் கேரில் உள்ள சிறந்த எலும்பியல் மருத்துவர்களை அணுகி, முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கான சராசரி செலவைப் பெறுங்கள். 

    முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையின் நன்மைகள்

    பாரம்பரிய முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவு ஆக்கிரமிப்பு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் சில நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன-

    • சிறிய வெட்டுக்கள் (பெரும்பாலும் 3 முதல் 4 அங்குலம்)
    • மீட்பு காலம் குறைவானது 
    • முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைவு.
    • வழக்கமான மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை விட வெற்றி விகிதம் இதில் அதிகமாக உள்ளது.
    • குறைந்த அளவு ஆக்கிரமிப்பு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையில் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. 

    முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு உங்களை கவனித்துக் கொள்ளுதல்

    மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, குறிப்பாக உங்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் சில வாரங்களுக்கு, நீங்கள் உங்கள் முழங்காலை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும், உங்கள் மருத்துவர் உங்களால் முடிந்த அளவுக்கு விரைவில் நடக்க உங்களை ஊக்குவிப்பார். வாக்கிங் எய்ட் அல்லது சப்போர்ட் உதவியுடன் நீங்கள் நடக்கத் தொடங்கலாம். ஆனால் சிறிது நேரத்திலேயே, பெரும்பாலான நோயாளிகள் தானாகவே நடந்து செல்வதை வசதியாக உணர்கிறார்கள். 

    முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடையும் காலமான முதல் 3 மாதங்களில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய முன்னேற்றத்தின் பொதுவான காலவரிசை இங்கே உள்ளது-  

    • உங்கள் அறுவை சிகிச்சைக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு –வாகனம் ஓட்டுதல், நடைபயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தினசரி வேலைகள் போன்ற குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் தினசரி செயல்பாடுகளை ஒருவர் தொடங்க முடியும்.
    • உங்கள் அறுவை சிகிச்சைக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு- இரண்டாவது மாத இறுதியில், பெரும்பாலான நோயாளிகள் நீச்சல், பைக்கிங் மற்றும் நீண்ட நடைப்பயிற்சி போன்ற குறைந்த தாக்கம் கொண்ட உடல் செயல்பாடுகளைத் தொடங்க அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், உங்கள் மீட்சி மற்றும் நலத்தைப் பொறுத்து, உங்கள் மருத்துவர் இதுபோன்ற நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு இன்னும் சில நாட்கள் அல்லது வாரங்கள் காத்திருக்க அறிவுறுத்தலாம். 
    • உங்கள் அறுவை சிகிச்சைக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு- நீங்கள் ஓட்டம் அல்லது உங்களுக்கு விருப்பமான பிற செயல்பாடுகள் போன்ற சில உயர் தாக்க உடல் செயல்பாடுகளுக்கு நீங்கள் திரும்பலாம். இதை செய்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். உங்கள் எலும்பியல் மருத்துவர் நீங்கள் இந்த செயல்பாடுகளை மெதுவாகத் தொடங்கவும் உங்களுக்கு நீங்களே நேரம் ஒதுக்கவும் பரிந்துரைப்பார். கடைசியாக, நீங்கள் முன்பு செய்து பழக்கப்பட்ட அளவுக்கு மீண்டும் செயல்பட முடியும். 

    முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையில் ஏதேனும் ஆபத்துகள் உள்ளனவா?

    முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மேம்பட்ட மற்றும் குறைந்த அளவு ஆக்கிரமிப்பு நுட்பங்களுடன் செய்யப்படுகிறது, அதாவது ஆர்த்ரோஸ்கோபி. ஆனால், மற்ற அறுவை சிகிச்சைகளைப் போலவே, முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையும் உங்கள் எலும்பு அறுவை சிகிச்சை நிபுணருடன் காலந்தாலோசிக்கக் கூடிய ஒரு சில சாத்தியமான அபாயங்களை உட்படுத்தலாம். அபாயங்களில் சில- 

    • தொற்றுனோய்கள்
    • மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின் போது அல்லது அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் எலும்பு முறிவு
    • எலும்பு சிமெண்ட்டினால் ஏற்படக்கூடிய ஒவ்வாமை
    • பாதிக்கப்பட்ட முழங்கால் மூட்டைச் சுற்றி நரம்பு மற்றும் தமனியில் ஏற்படும் சேதம்
    • முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையின் போது கொடுக்கப்பட்ட மயக்க மருந்தின் மோசமான எதிர்வினை
    • அதிகப்படியான தழும்பு திசு வளர்ச்சி
    • அறுவை சிகிச்சைக்குப் பின் முழங்கால் மூட்டில் வலி மற்றும் இறுக்கம்
    • ஆழமான நரம்பு இரத்த உறைவுக்கான வாய்ப்புகள் 

    மூட்டு மாற்று வகைகள்

    • முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை (டிகேஆர்)

    இந்த அறுவை சிகிச்சையின் போது, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சேதமடைந்த மூட்டுக்கு பதிலாக செயற்கை அல்லது உருவாக்கப்பட்ட மூட்டை பொறுத்துகிறார். ஏதேனும் காயம் அல்லது எலும்பு சிதைவு நோய்களின் காரணமாக எலும்புகள் கடுமையாக சேதமடைந்திருந்தால் இது பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது.

    • பகுதி மூட்டு மாற்று சிகிச்சை

    பகுதி மூட்டு மாற்று சிகிச்சைகளில், முழங்கால் மூட்டின் ஒரு பகுதி மட்டுமே சிதைந்திருக்கும். . எனவே, பாதிக்கப்பட்ட பக்கத்திற்கு மட்டும் மூட்டு மாற்ற அறுவை சிகிச்சை நிபுணர் பரிந்துரைக்கிறார், இது பகுதி மூட்டு மாற்று என்று அழைக்கப்படுகிறது.

    • திருத்துதல் அல்லது சிக்கலான மூட்டு மாற்று

    கடுமையான மூட்டு அழற்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு மூட்டுச் செயல்பாட்டை மீட்டெடுக்க இரண்டு முதல் மூன்று முறை முழங்கால் மாற்று பரிந்துரைக்கப்படலாம். இந்த அறுவை சிகிச்சையில், பாதிக்கப்பட்ட முழங்கால் மூட்டுக்கு அதிக ஸ்திரத்தன்மையை வழங்குவதற்காக அறுவை சிகிச்சை நிபுணர் ஒரு மாற்றியமைக்கப்பட்ட இம்பிலேன்டை பயன்படுத்துகிறார்.

    • மூட்டு சில்லு மாற்று

    இது பட்டேல்லோஃபீமோரல் ஆர்த்ரோபிளாஸ்டி என்றும் அழைக்கப்படுகிறது. முழங்கால் மூட்டின் மேற்பரப்பின் கீழ் பகுதி சிதைவு நோய்களால் பாதிக்கப்படும் போது, முழங்கால் மூட்டின் சில்லுப் பகுதிக்கு மாற்று அறுவை சிகிச்சையை அறுவைசிகிச்சை நிபுணர் பரிந்துரைக்கிறார்.

    கேஸ் ஸ்டடி

    அக்ஷி சவுகான் (மாற்றப்பட்ட பெயர்) பிரிஸ்டின் கேர் நிறுவனத்தை அணுகி, எங்கள் மருத்துவ ஒருங்கிணைப்பாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டார். இடது முழங்காலில் கடுமையான வலி மற்றும் வீக்கம் இருப்பதாகக் கூறிய அவர், இதன் காரணமாக அவர் நடப்பதிலும் காலை அசைப்பதிலும் பிரச்சினைகளை எதிர்கொண்டார்.  

    எங்கள் மருத்துவ ஒருங்கிணைப்பாளர் எங்கள் எலும்பியல் மருத்துவ நிபுணரான டாக்டர் அபிஷேக் பன்சாலை சந்திக்க முன்பதிவு செய்தார். நோயின் தீவிரத்தை மதிப்பிட அவர் உடல் பரிசோதனைக்கு பரிந்துரைத்தார். அவருக்கு விளையாட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவரிடம் தெரிவித்த அவர், இந்த சம்பவத்திற்கு பின்னர் வலி ஏற்படத் தொடங்கியது என்றும் கூறினார். முழங்கால் மூட்டு மற்றும் எலும்பு பற்றிய தெளிவான விவரத்தைப் பெற எக்ஸ்ரே, எம். ஆர். ஐ மற்றும் பிற இமேஜிங் சோதனைகள் உட்பட சில நோய் கண்டறியும் சோதனைகளை மருத்துவர் பரிந்துரைத்தார்.

    நோயறிதல் சோதனைகளின் முடிவுகளைப் பெற்ற பின்னர், டாக்டர் பன்சால் முழங்கால் எலும்பு சிதைவு பற்றி நோயாளிக்கு தெரிவித்து பகுதி முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் படி அறிவுறுத்தினார். மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர், அறுவை சிகிச்சைக்கு பின்னர் எந்த மாறுபட்ட அறிகுறிகளும் இல்லாததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டாக்டர் பன்சால் – சுகமான குணமடைவதற்கான கால அளவு மற்றும் திட்டமிடப்பட்ட 3 தொடர் ஆலோசனைகளுக்கான சில வழிகாட்டுதல்கள்களை வழங்கினார். 

    திருமதி சவுகான் 5 வாரங்கள் பிசியோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வெற்றிகரமாக குணமடைந்தார். முழங்கால் மூட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் இயக்கத்தை மீட்டெடுக்க இந்த அறுவை சிகிச்சை உதவியது. இப்போது அவர் எந்த சிரமமும் இல்லாமல் விளையாட்டை விளையாடுகிறார்.

     

    மூட்டு மாற்று பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

    மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு எலும்பியல் நிபுணரை நான் எப்போது அணுக வேண்டும்?

    கடுமையான முழங்கால் காயம் அல்லது எலும்புத் தேய்மானம், முடக்கு வாதம் போன்ற பிற வலிமிகுந்த நிலைமைகளுக்குப் பிறகு உங்களுக்கு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம், அது நடைப்பயிற்சி, படிக்கட்டுகள் ஏறுதல் போன்ற அன்றாட வேலைகளைச் செய்வதற்கான உங்கள் திறனைக் கட்டுப்படுத்தலாம்.

    முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் மீண்டும் முழங்கால் பிரச்னைகள் ஏற்படும் விகிதம் என்ன?

    பொதுவாக, ஒரு வெற்றிகரமானமூட்டு மாற்று சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி குறைந்தது அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு முழங்கால் தொடர்பான எந்த பிரச்னைகளையும் அனுபவிக்க மாட்டார்.

    எனக்கான சிறந்த இம்பிளாண்ட்டை எவ்வாறு தேர்வு செய்வது?

    பொதுவாக, முழங்கால் இம்பிளாண்ட்டுக்கான தேர்வு நோயாளியின் வயது, அறுவை சிகிச்சை வகை, உடல்நிலை, முழங்கால் சிதைவின் தீவிரம், பட்ஜெட் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. எனவே, கவனமாக பரிசீலித்து, மருத்துவர் மற்றும் நோயாளி இணைந்து இம்ப்ளான்ட்டை தேர்வு செய்கிறார்கள்.

    மூட்டு மாற்றத்திற்குப் பிறகு எவ்வளவு விரைவில் நான் நடக்க ஆரம்பிக்க முடியும்?

    நீங்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அதே நாளில் படுக்கையிலிருந்து எழுந்து நடக்கத் தொடங்குவீர்கள், மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு 2 முதல் 3 நாட்களுக்குப் பிறகு வழக்கமாக மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவீர்கள். அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடனடியாக ஒரு எலும்பு அறுவை சிகிச்சை நிபுணரால் கண்காணிக்கப்படும் மேற்பார்வையிடப்பட்ட மற்றும் தனிப்பட்ட உடற்பயிற்சி திட்டத்துடன் புனர்வாழ்வு தொடங்கும். உங்களுக்கு வலி இருக்காது மற்றும் வலியை நிர்வகிக்கவும், சிக்கல்களைத் தடுக்கவும், சீக்கிரம் குணமாகவும் மருந்துகள் கொடுக்கப்படும்.

    மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் எவ்வளவு காலம் மருத்துவமனையில் இருப்பேன்?

    பெரும்பாலான நோயாளிகள் குறைந்தபட்ச ஊடுருவல் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு 3 – 5 நாட்களுக்கு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

    முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் எவ்வளவு காலம் வலியை உணருவேன்?

    முழங்கால் மாற்று சிகிச்சைக்குப் பிறகு, ஆரம்ப வலி, இன்ஃப்ளமேஷன் மற்றும் வீக்கம் பொதுவாக 2 முதல் 4 வாரங்களுக்குள் சரியாகிவிடும். வலி கடுமையாக இருக்காது, வலி நிவாரணிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள் மூலம் எளிதாக சமாளிக்கலாம்.

    முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு என்ன வகையான மயக்க மருந்து பயன்படுத்தப்படுகிறது?

    பொதுவாக, மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான பகுதியை மரத்துப்போகச் செய்ய ஜெனரல் அல்லது ஸ்பைனல் அனஸ்தீஷியா பயன்படுத்தப்படுகிறது.

    எந்த வயதில் நான் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்?

    அனைத்து வயதினருக்கும் குறைந்த அளவு ஆக்கிரமிப்பு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை செய்துகொள்ளலாம். 50 வயதுக்கு மேற்பட்வற்கள் கூட, மருத்துவ ரீதியாக நல்ல உடல் தகுதியும், ஆரோக்கியத்துடன் இருந்தாலும், ஆர்தரைடிஸ் மூட்டு அழற்சி போன்ற வேதனையான நிலைமைகளால் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டால், மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.

     

     

    View more questions downArrow
    green tick with shield icon
    Content Reviewed By
    doctor image
    Dr. D. K. Das
    23 Years Experience Overall
    Last Updated : July 26, 2024

    Our Patient Love Us

    Based on 74 Recommendations | Rated 5 Out of 5
    • LM

      Lalitha Mamidala

      5/5

      I cannot express enough gratitude for the outstanding assistance provided by Poonam Soni during our journey towards a total knee replacement surgery. Poonam's profound knowledge and unwavering commitment were evident from the very beginning, as she meticulously guided us through every step of the process. From helping us select the most suitable doctor and hospital to seamlessly managing all bookings, appointments, and even liaising with our insurance team, Poonam's dedication knew no bounds. Her proactive approach ensured that every aspect of our experience was smooth as butter and stress-free. Poonam's professionalism, combined with her genuine care and compassion, truly set her apart. She not only addressed all our concerns with patience and expertise but also went above and beyond to ensure our comfort and peace of mind throughout. Thanks to Poonam's invaluable support, we felt well-informed, supported, and cared for every step of the way. Her exceptional service has left an indelible impression on us, and our entire family(specially my mother) are incredibly grateful for her tireless efforts. The day when my mother was scheduled for discharge, she went a step above and got my mother a beautiful bouquet with get well soon wishes embedded on it and that made my mother's day! In summary, Poonam's exemplary performance reflects the highest standards of excellence and client service. Pristyn Care is fortunate to have such a dedicated and talented individual on their team. I wholeheartedly recommend Poonam to anyone seeking personalized and professional healthcare assistance in orthopaedic department. I at time use to feel as if I'm talking to an orthopaedic doctor and that's the level of expertise possessed by her at the professional front. Thank you, Poonam, for your outstanding support and unwavering commitment to all your clients well-being. You have truly made a difference in our lives, and we are immensely grateful for your exceptional service!

      City : HYDERABAD
      Doctor : Dr. Hari Prakash
    • YS

      yosha sanghvi

      3/5

      I had a knee replacement surgery at Pristyn Care Chennai and Dr. S Natarajan was my doctor. He did an amazing job and helped me recover smoothly. The clinic was also very nice and comfortable. I am very thankful for the care I received and now I can move around much better.

      City : CHENNAI
    • UR

      Usha Rani

      3/5

      Highly recommended doctor_for knee replacement. My mother-in-law underwent knee replacement for both knees within a week. We are happy to say Dr. Kamal Bachani did a fantastic surgery, and the results are evident now after 3 months.

      City : DELHI
    • RP

      Ranga Prasana

      4/5

      The doctor gave me a lot of confidence in undergoing surgery. The doctor and his team performed the surgery very well. I could walk within 5 hours after the surgery. He did the surgery to the utmost satisfaction.

      City : CHENNAI
    • AD

      Ananth Darshan

      3/5

      My mother suffered from severe knee pain and her daily activities were challenging. We contacted Dr. Sourabh Kulkarni. After consultation with the doctor he recommended right knee replacement surgery and the results were remarkable. After the surgery, in an astonishing 20 days, my mother is walking independently and without any pain or support.

      City : MUMBAI
    • PC

      pavani cherlapalli

      3/5

      Dr. Venu Madhav Badla did my total knee replacement surgery and I was really impressed by the way he interacted with me and made me feel at ease and also gave me the confidence and assurance. My experience with him is really very good. I recommend him

      City : HYDERABAD