நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்
location
Get my Location
search icon
phone icon in white color

அழைப்பு

Book Free Appointment

ரைனோபிளாஸ்டி அறுவை சிகிச்சை: நோய் கண்டறிதல், செயல்முறை மற்றும் மீட்பு (Rhinoplasty In Tamil)

மூக்கின் வடிவத்தை விரும்பிய முறையில் மாற்றுவதற்கு ரைனோபிளாஸ்டி சிறந்த வழியாகும். மூக்கின் வடிவத்தை மாற்றி அமைப்பதன் மூலம் ஆண்களும் பெண்களும் தங்கள் முக அம்சங்களை மேம்படுத்த உதவும் வகையில் பிரிஸ்டின் கேர் மேம்பட்ட ரைனோபிளாஸ்டி சிகிச்சையை வழங்குகிறது.

மூக்கின் வடிவத்தை விரும்பிய முறையில் மாற்றுவதற்கு ரைனோபிளாஸ்டி சிறந்த வழியாகும். மூக்கின் வடிவத்தை மாற்றி அமைப்பதன் மூலம் ஆண்களும் பெண்களும் தங்கள் முக அம்சங்களை மேம்படுத்த உதவும் வகையில் பிரிஸ்டின் கேர் ... மேலும் வாசிக்க

anup_soni_banner
இலவசமாக மருத்துவரை அணுகவும்
Anup Soni - the voice of Pristyn Care pointing to download pristyncare mobile app
i
i
i
i
Call Us
We are rated
2 M+ மகிழ்ச்சியான நோயாளிகள்
700+ மருத்துவமனைகள்
40+ நகரங்கள்

To confirm your details, please enter OTP sent to you on *

i

40+

நகரங்கள்

Free Consultation

Free Consultation

Free Cab Facility

Free Cab Facility

No-Cost EMI

இல்லை செலவு EMI

Support in Insurance Claim

Support in Insurance Claim

1-day Hospitalization

1-day Hospitalization

USFDA-Approved Procedure

சான்றளிக்கப்பட்ட செயல்முறை USFDA

ரைனோபிளாஸ்டி அறுவை சிகிச்சை மருத்துவர்கள்

Choose Your City

It help us to find the best doctors near you.

பெங்களூர்

சென்னை

கோயம்புத்தோர்

டெல்லி

ஹைதராபாத்

கொல்கத்தா

மும்பை

புனே

டெல்லி

குர்கான்

நொய்டா

அகமதாபாத்

பெங்களூர்

  • online dot green
    Dr. Rohit Devdutt Bavdekar (LkcatVgAb8)

    Dr. Rohit Devdutt Bavdek...

    MBBS, MD, DNB-Plastic Surgery
    30 Yrs.Exp.

    4.7/5

    30 + Years

    Bangalore

    Aesthetics and Plastic Surgeon

    Call Us
    6366-528-521
  • online dot green
    Dr. Tapeshwar Seghal (pEIy9o0UZ2)

    Dr. Tapeshwar Seghal

    MBBS, MS-General Surgery, DNB-Plastic Surgery
    27 Yrs.Exp.

    4.9/5

    27 + Years

    Delhi

    Aesthetics and Plastic Surgeon

    Call Us
    6366-528-521
  • online dot green
    Dr. Devidutta Mohanty (Qx2Ggxqwz2)

    Dr. Devidutta Mohanty

    MBBS,MS, M. Ch- Plastic Surgery
    20 Yrs.Exp.

    4.5/5

    20 + Years

    Hyderabad

    Aesthetics and Plastic Surgeon

    Call Us
    6366-528-521
  • online dot green
    Dr. Ashish Sangvikar (9Mv4L2I495)

    Dr. Ashish Sangvikar

    MBBS, DNB- General Surgery, M.CH-Plastic Surgery
    18 Yrs.Exp.

    4.8/5

    18 + Years

    Mumbai

    Aesthetics and Plastic Surgeon

    Call Us
    6366-528-521
  • ரைனோபிளாஸ்டி என்றால் என்ன? (Rhinoplasty In Tamil)

    ரைனோபிளாஸ்டி என்பது மூக்கின் வடிவத்தை மாற்றி அதன் செயல்பாட்டை மேம்படுத்தும் அறுவை சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறை திறம்பட்ட முறையில் மூக்கை மாற்றி மறுசீரமைக்கிறது. ரைனோபிளாஸ்டியில் இரண்டு வகைகள் உள்ளன: அழகு சார்ந்த அறுவை சிகிச்சை மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை. அழகு சார்ந்த அறுவை சிகிச்சை என்பது தோற்றத்தை மாற்றுவதில் மட்டும் கவனம் செலுத்துகிறது, மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மூக்கின் வடிவத்தையும் செயல்பாடுகளையும் மீட்டெடுக்கிறது. மூக்கில் ஏற்படும் காயங்கள், பிறவிக் குறைபாடுகள், சுவாசக் கோளாறுகள், முன்பு தோல்வியுற்ற ரைனோபிளாஸ்டி சிகிச்சையைக் கூட மறுசீரமைப்பு ரைனோபிளாஸ்டி திறம்பட தீர்க்கும்.

    ரைனோபிளாஸ்டி Surgery Cost Calculator

    Fill details to get actual cost

    i
    i
    i

    To confirm your details, please enter OTP sent to you on *

    i

    ரைனோபிளாஸ்டிக்கான சிறந்த சிகிச்சை மையம்

    மூக்கு வேலைகள் உட்பட அனைத்து வகையான ஒப்பனை சிகிச்சைகளுக்கும் விரிவான கவனிப்பைப் பெற சிறந்த இடம் பிரிஸ்டின் கேர் ஆகும். நோயாளிகள் விரும்பும் பலனைப் பெற நாங்கள் திறந்த மற்றும் மூடப்பட்ட ரைனோபிளாஸ்டி இரண்டையும் செய்கிறோம். எங்கள் சொந்த கிளினிக்குகள் மற்றும் கூட்டு மருத்துவமனைகள் உள்ளன, அவை உயர்தர உள்கட்டமைப்பு மற்றும் உயர்தர பராமரிப்பு வழங்க அத்தியாவசியமான நவீன வசதிகளைக் கொண்டுள்ளன. 

    நீங்கள் எங்களைத் தொடர்பு கொண்டு எங்கள் சிறந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ரைனோபிளாஸ்டியை திட்டமிடலாம். எங்கள் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ரைனோபிளாஸ்டி மற்றும் பிற அழகுசாதன அறுவை சிகிச்சை செய்முறைகளை அதிக பட்ச வெற்றி வீதத்துடன் செய்வதில் 10+ வருட அனுபவமுடையவர்கள். உங்கள் மூக்கின் வடிவத்தை செம்மையாக்கவும் மேம்படுத்தவும் அவர்களின் திறமை மற்றும் நிபுணத்துவத்தை நீங்கள் நம்பலாம். 

    ரைனோபிளாஸ்டியில் என்ன நடக்கிறது?

    Diagnosis (நோயைக் கண்டறிதல்)

    மருத்துவருடன் கலந்தாலோசிக்கும் போது, அவர் உரையாடலை உங்கள் இலக்குகளைப் பற்றி பேசித் தொடங்குவார். மூக்கு உங்களை என்ன தொந்தரவு செய்கிறது என்றும் நீங்கள் என்ன வகையான மாற்றங்களை விரும்புகிறீர்கள் என்றும் மருத்துவர் கேட்பார். மிகச் சரியான மூக்கு என்று ஒன்று இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே, மருத்துவர் உங்கள் தேவைகளைப் புரிந்து கொள்ள முயற்சிப்பார் மற்றும் இந்த செயல்முறையில் நீங்கள் என்ன வகையான மாற்றங்களை எதிர்பார்க்க வேண்டும் என்பதை விவரிப்பார். 

    தொடர்ந்து, மருத்துவர் மூக்கின் எலும்பு மற்றும் குருத்தெலும்புகளை சரிபார்ப்பார், மேலும் மற்ற முக அம்சங்களையும் மதிப்பீடு செய்வார். ரைனோபிளாஸ்டி மூலம் நீங்கள் அடைய விரும்பும் எதிர்பார்ப்புகள் யதார்த்தமானதா இல்லையா என்பதை மதிப்பீடு செய்த பின்னரே மருத்துவரால் கூற முடியும். 

    நேரடி பரிசோதனையில், தோல் தடிமன், மூக்கு வால்வுகள், ஆஸ்டியோஜெனிக் மற்றும் கார்டிலாஜினஸ் கோளாறுகள், லிபிட் சுரப்பிகள் போன்றவற்றை மருத்துவர் ஆய்வு செய்வார். அறுவை சிகிச்சைக்கு முன் செய்யப்படும் பரிசோதனைகள், நீங்கள் அறுவை சிகிச்சைக்குத் தகுதியானவரா என்பதை உறுதிப்படுத்த அவசியம். 

    மேலும் மதிப்பீட்டிற்காக இமேஜிங் சோதனைகள், இரத்தப் பரிசோதனைகள், எலக்ட்ரோகார்டியோகிராபி, மற்றும் சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளையும் அறுவை சிகிச்சை நிபுணர் பரிந்துரைக்கலாம். 

    Procedure (செயல்முறை )

    ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் தனித்தன்மை வாய்ந்தது. எனவே, தனிநபரின் குறிப்பிட்ட உடற்கூறியல் மற்றும் இலக்குகளுக்கு ஏற்ப செயல்முறையின் படிகள் தனிப்பயனாக்கப்படுகின்றன. இந்த சிகிச்சை செயல்முறை பின்வருமாறு:

    • உடலை மரத்துப்போகச் செய்ய லோக்கல் அல்லது ஜெனரல் அனெஸ்தீஷியா பயன்படுத்தப்படுகிறது. லோக்கல் அனெஸ்தீசியா பயன்படுத்துவதன் மூலம் மூக்கு மற்றும் முகப் பகுதி மட்டும் மரத்துப்போகும். ஜெனரல் அனெஸ்தீஷியா மூலம், முழு உடலும் மரத்துப்போகும் மேலும் நீங்கள் பெரும்பாலும் அறுவைசிகிச்சையின் போது மயக்க நிலையில் இருப்பீர்கள். 
    • மூக்கின் உள்ளேயோ (மூடப்பட்ட அறுவை சிகிச்சை) அல்லது கொலுமெல்லாவின் குருக்கேயோ (திறந்த அறுவை சிகிச்சை) ஒரு வெட்டு ஏற்படுத்தப்படுகிறது. இந்த வெட்டின் மூலம், மூக்கு எலும்புகளையும் குருத்தெலும்புகளையும் மூடியிருக்கும் தோலை எழுப்பி, அறுவை சிகிச்சை நிபுணர் அதை மறுவடிவமைப்பதற்கான உள் கட்டமைப்பை அணுகுகிறார். 
    • அறுவை சிகிச்சை நிபுணர் உங்கள் தேவைகளுக்கேற்ப மூக்கை மறுசீரமைப்பு செய்கிறார். உதாரணமாக, உங்கள் மூக்கு பெரியதாக இருந்தால், எலும்பு அல்லது குருத்தெலும்பை நீக்குவதன் மூலம் அறுவை சிகிச்சை நிபுணர் அதன் அளவைக் குறைக்கலாம். மற்ற சந்தர்ப்பங்களில், மூக்கின் வடிவத்தையும் அளவையும் அதிகரிக்க அறுவை சிகிச்சை நிபுணர் குருத்தெலும்புகளை சேர்க்க வேண்டியிருக்கலாம். பொதுவாக செப்டம்பில் இருக்கும் குருத்தெலும்பு இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. 
    • தேவைப்பட்டால், அறுவை சிகிச்சை நிபுணர் விலகிய செப்டமையும் சரி செய்வார். சுவாசத்தை மேம்படுத்தவும், உலர்ந்த மூக்கு, மூக்கடைப்பு, தலைவலி போன்ற பிற அறிகுறிகளிலிருந்தும் நிவாரணம் வழங்கவும் இது நேராக்கப்படுகிறது. 
    • மருத்துவர் மூக்கை தேவையான வடிவத்தில் செதுக்கிய பிறகு, மூக்கின் தோல், மற்றும் திசுக்களை தேவைக்கேற்ப செதுக்கி, வெட்டுக்காயங்களை கவனமாக மூடுவார். சில கூடுதல் வெட்டுக்கள் நாசியின் அளவையும் மாற்றுவதற்காக அவற்றைச் சுற்றி செய்யப்படலாம். 
    • அறுவை சிகிச்சை நிபுணர் மூக்கு குணமாக்கும்போது மூக்கைத் தாங்குவதற்காக ஸ்ப்ளிண்ட்ஸ் அல்லது கீல்களை வைப்பார். 

    அறுவை சிகிச்சை முடிந்தவுடன் உடனடியாக நீங்கள் கண்காணிப்பு அறைக்கு மாற்றப்படுவீர்கள். நீங்கள் கண் விழிக்கும் வரை ஊழியர்கள் உங்களைக் கண்காணிப்பார்கள் மற்றும் சிக்கல்களின் அறிகுறிகள் ஏதும் இல்லை என்றால் நீங்களும் அதே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவீர்கள்.

    அறுவை சிகிச்சைக்கு தயாராவது எப்படி?

    ரைனோபிளாஸ்டிக்கு உங்களைத் தயார்படுத்த, உங்களுக்கு மருத்துவர் தெளிவான அறிவுரைகளை வழங்குவார். இந்த அறிவுரைகளில் பின்வரும் அம்சங்கள் அடங்கும்:

    • அறுவை சிகிச்சைக்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆஸ்பிரின், ஐபுபுரூஃபன், அல்லது வைட்டமின் இ எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். இந்த மருந்துகள் அறுவை சிகிச்சையின் போது அதிகப்படியான ரத்தப்போக்கை ஏற்படுத்தும். 
    • அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் ஆபத்துகள் மற்றும் குணமாவதில் தாமதமாகுதல் போன்ற அறுவை சிகிச்சைக்கு பிந்தைய சிக்கல்கள் போன்றவற்றைக் குறைக்க அறுவை சிகிச்சைக்கு குறைந்தது 2-3 வாரங்களுக்கு முன்பு புகைபிடிப்பதை நிறுத்திவிடுங்கள். 
    • அறுவை சிகிச்சைக்கு முன், புரதம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள் இவை வேகமாக குணமடைய உதவும். 
    • அறுவை சிகிச்சைக்கு முன் எவ்வித மேக்கப்பும் போடக்கூடாது. 
    • அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாள் இரவில் சாப்பிடுவதையும் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    அறுவைசிகிச்சை திட்டமிடப்பட்டவுடன், அறுவைசிகிச்சை நாளில் உங்களுடன் இருக்க யாராவது ஒருவர் தேவை.

    Pristyn Care’s Free Post-Operative Care

    Diet & Lifestyle Consultation

    Post-Surgery Follow-Up

    Free Cab Facility

    24*7 Patient Support

    அபாயங்கள் மற்றும் சிக்கல்கள்

    During Surgery (அறுவை சிகிச்சையின் போது)

    மற்ற பெரிய அறுவை சிகிச்சைகளைப் போலவே, ரைனோபிளாஸ்டியும் கொண்டுள்ள அபாயங்கள்:

    • வெட்டுக்காயங்களின் வழியே ரத்தம் வெளியேறுதல்
    • உள் உறுப்புகள் வெளிப்புற மாசிபாட்டிற்கு வெளிப்பட்டால் ஏற்படும் தொற்று
    • அனெஸ்தீஷியாவிற்கு எதிரான எதிர்வினை

    பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரால் இந்த அபாயங்களை திறம்படக் குறைக்க முடியும். அதனால்தான் ரைனோபிளாஸ்டி செய்ய அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணரை தேர்வு செய்ய வேண்டும் என அடிக்கடி பரிந்துரைக்கப்படுகிறது. அறுவை சிகிச்சை பாதுகாப்பாக நடைபெறுவதை அவர்கள் உறுதி செய்வார்கள், மற்றும் நீங்கள் சிறந்த முடிவுகளை பெறுவீர்கள்.

    After Surgery (அறுவை சிகிச்சைக்குப் பின்)

    அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஏற்பட வாய்ப்புள்ள சிக்கல்கள்:

    • மூக்கு வழியாக சுவாசிக்கும் போது சிரமமாக இருத்தல்
    • மூக்கைச் சுற்றி நிரந்தர மரத்துப்போதல்
    • சீரற்ற மூக்கு
    • தோலில் வலி அல்லது நிறம் மாறுதல்
    • தொடர்ந்து வீக்கமாக இருத்தல்
    • வடு
    • செப்டல் பெர்ஃபரேஷன், அதாவது செப்டமில் ஒரு துளை
    • கூடுதல் அறுவை சிகிச்சைக்கான தேவை

    மருத்துவரின் அறிவுறுத்தல்களை சரியாகப் பின்பற்றி அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பில் முறையான கவனம் செலுத்தினால் இந்த சிக்கல்களையும் தவிர்க்க முடியும். இந்த சிக்கல்கள் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி, அவர்களின் உதவியை நாட வேண்டும்.

    ரைனோபிளாஸ்டிக்கு பிறகு என்ன எதிர்பார்க்கலாம்?

    ரைனோபிளாஸ்டி செய்த பிறகு, முதல் நாள் நீங்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும். இரத்தப்போக்கு மற்றும் வீக்கம் குறைவாக இருக்க உங்கள் தலையை உங்கள் மார்பகத்தை விட உயரமாக வைக்கும் படி மருத்துவர் உங்களுக்கு ஆலோசனை வழங்குவார்.

    ஆரம்பத்தில், வீக்கம் அல்லது மூக்கின் உள்ளே வைக்கப்படும் ஸ்ப்ளிண்ட்ஸ் காரணமாக நீங்கள் மூக்கடைப்பை உணரலாம். அறுவை சிகிச்சைக்கு பின் ஒரு வாரத்திற்கு மூக்கின் உள்ளே போடப்பட்ட கட்டுகள் அப்படியே இருக்க வேண்டும். உங்கள் மூக்கைப் பாதுகாக்கவும் தாங்கவும் மருத்துவர் வெளிப்புற ஸ்ப்ளிண்ட் ஒன்றையும் பயன்படுத்தலாம்.

    அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் சில நாட்களில், உங்களுக்கு லேசான இரத்தப்போக்கு அல்லது சளி ஒழுகுதல் ஏற்படலாம். உங்கள் மூக்கின் அடியில் ஒழுகுதலை உறிஞ்சியெடுக்க துணி வைக்கப்பட்டு இருந்தால், அதை எப்படி மாற்றுவது என்பதையும் மருத்துவர் உங்களுக்கு அறிவுறுத்துவார்.

    இவை அனைத்துடன் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்புக்கான குறிப்புகளும், அறிவுறுத்தல்களும் அடங்கிய ஒரு குணமாவதற்கான வழிகாட்டியை அறுவை சிகிச்சை நிபுணர் உருவாக்குவார். நீங்கள் விரைவாக குணமடைய உதவும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதை உறுதி செய்ய ஒரு டயட்டீஷியன் சார்ட்டும் அந்த வழிகாட்டியில் சேர்க்கப்படும்.

    ஏன் ரைனோபிளாஸ்டியை தேர்ந்தெடுக்க வேண்டும்?

    பெரும்பாலான மக்கள் பின்வரும் காரணங்களுக்காக ரைனோபிளாஸ்டி அறுவை சிகிச்சையை தேர்ந்தெடுக்கின்றனர்:

    • மூக்கின் மேல் உள்ள ஹம்ப்பை நீக்க
    • இணைப்பை நேராக்க வேண்டும் 
    • மூக்கின் நுனியை மறுவடிவமைக்க 
    • நாசியின் அளவை அதிகரிக்க/ குறைக்க 
    • ஏதாவது காயம் ஏற்பட்ட பிறகு மூக்கை சரி செய்ய 
    • சுவாசப் பாதைகளைத் திறக்க 
    • மூக்கை பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ ஆக்க 

    மூக்கு வேலைகள் அழகு சார்ந்த காரணங்களுக்காக மட்டுமே செய்யப்படுகின்றன என்று பலரும் தவறாக புரிந்து கொள்கின்றனர். ஆயினும், மருத்துவ காரணங்களாலும் இதனை மேற்கொள்ளலாம். ஒரு பிரச்சினையைத் தீர்க்க சிலருக்கு மூக்கை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய வேண்டியிருக்கலாம் ஆனால் சிலர் மூக்கின் வடிவம் மற்றும் அளவை மாற்ற மட்டுமே விரும்பலாம்.

    ரைனோபிளாஸ்டியின் பயன்கள்

    ரைனோபிளாஸ்டி ஒரு அழகு சார்ந்த சிகிச்சையாக கருதப்பட்டாலும், இது அழகியல் மற்றும் உடல்நலம் தொடர்பான நன்மைகள் இரண்டையும் கொண்டுள்ளது.

    • ரைனோபிளாஸ்டி பிறவி அல்லது நீண்ட கால சுவாச பிரச்சனைகளை சரி செய்வதன் மூலம் சுவாசத்தை மேம்படுத்துகிறது. 
    • மூக்கு வேலை நிச்சயமாக தனிநபரின் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையை அதிகரிக்கிறது. 
    • சைனஸ் தொடர்பான தலைவலி, மூக்கடைப்பு, சைனஸ் அழுத்தம் போன்ற பிரச்னைகளும் ரைனோபிளாஸ்டி மூலம் தீர்க்கப்படுகின்றன. 
    • இது உடைந்த அல்லது கோணலான மூக்கின் தோற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. 
    • மூக்கை மேலும் மேம்படுத்தவும், விரும்பிய முடிவுகளைப் பெறவும் தனிநபர் மறு ரைனோபிளாஸ்டி செய்துகொள்ளலாம். 
    • ரைனோபிளாஸ்டி குறட்டை விடுவதிலிருந்து நிவாரணத்தை வழங்குகிறது, இதனால் தூக்கத்தின் தரம் மேம்படுகிறது. 
    • மூக்கின் வடிவத்தில் கட்டி, வளைவு அல்லது ஒழுங்கற்ற தன்மை இருந்தால் அவற்றை ரைனோபிளாஸ்டி அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.

    Alternative to Rhinoplasty (ரைனோபிளாஸ்டிக்கு மாற்று )

    இது பலருக்கும் தெரியாது. ஆனால், அறுவை சிகிச்சை செய்யப்படாத ஒரு வகை ரைனோபிளாஸ்டி உள்ளது. இதற்கு லிக்விட் ரைனோபிளாஸ்டி என்று பெயர். இது தற்காலிகமாக டோர்ஸல் ஹம்ப், சமச்சீரற்ற மற்றும் குறுகலான மூக்கு நுனியை சரிசெய்கிறது. 

    இந்த முறையில் மூக்கின் வளைவுகளை மேம்படுத்தி மறுவடிவம் கொடுக்க ஃபில்லர்களை அறுவை சிகிச்சை நிபுணர் மூக்கினுள் செலுத்துகிறார். ஹையலுரோனிக் அமிலம் (எச்ஏ) இந்த செயல்முறைக்கு பயன்படுத்தப்படுகிறது, இது கன்னங்கள் மற்றும் உதடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 

    இது அறுவை சிகிச்சைக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மாற்று என்றாலும், திரவ ரைனோபிளாஸ்டியின் முடிவுகள் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. முடிவுகளைப் பேண நீங்கள் அதிக சிகிச்சைகளைப் பெற வேண்டியிருக்கும்.

    ரைனோபிளாஸ்டிக்குப் பின் குணமாதல் மற்றும் முடிவுகள்

    ரைனோபிளாஸ்டிக்கு பிறகு குணமடையும் விகிதம் ஒவ்வொரு நோயாளிக்கும் வேறுபடும். பொதுவாக வீக்கம் மறைய பல மாதங்கள் ஆகும். மேலும் சிறிது காலம் கழித்து, நோயாளி தானே தன் வீக்கத்தைக் கவனிப்பதை நிறுத்திவிடுவார்கள். கட்டாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் 4-5 வாரங்களுக்குப் பிறகு நோயாளி தினசரி நடவடிக்கைகளைத் தொடரலாம். சரியாக கவனித்துக்கொண்டால், குறிப்பிட்ட நேரத்திற்குள் குணமடைவீர்கள்.

    பொதுவாக மூக்கு வேலையின் முடிவுகள் கண்ணுக்குப் புலப்பட ஒரு வருடம் வரை ஆகலாம். ஆனால் குணமாக தேவைப்படும் காலமும் இறுதி முடிவுகளும் நோயாளிக்கு நோயாளி மாறுபடும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். மூக்கில் குறைந்தபட்ச வேலைப்பாடுகள் செய்தால், இறுதி முடிவுகள் விரைவில் தெரியும். ஆனால், பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டால், மூக்கு முழுமையாக குணமாக சில மாதங்கள் ஆகலாம். ஒரு வருடத்திற்குள் இறுதி முடிவுகள் தெரியவரும்.

    Case Study (கேஸ் ஸ்டடி)

    ஆகஸ்ட் 4, 2021 அன்று ஆகாஷ் கோஸ்வால் என்ற நோயாளி தனது குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ரைனோபிளாஸ்டி செய்ய விரும்பி எங்களிடம் வந்தார். மூக்கின் நடுவே ஒரு வீக்கம் இருந்தது, மேலும் சற்றே விலகியும் இருந்தது. டாக்டர் கௌரவ் சல்லியா இந்த கேசைக் கையாண்டார். அறுவை சிகிச்சையின் மீதான எதிர்பார்ப்புகள் குறித்து நோயாளியுடன் விவாதித்தார். நோயாளிக்கு சில பரிசோதனைகள் பரிந்துரைக்கப்பட்டன, அதை அவர் அடுத்த நாள் செய்தார். அவர் அறுவை சிகிச்சைக்கு தகுதியானவர் என்பதை மருத்துவர் கண்டறிந்தார் மற்றும் அவர் திறந்த அல்லது மூடப்பட்ட ரைனோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்ய விரும்புகிறாரா என்று கலந்தாலோசித்தார். அவர் திறந்த அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுத்தார், மருத்துவர் அறுவை சிகிச்சையின் விளைவு என்ன என்பதை விளக்கினார். 

    அவரது அறுவை சிகிச்சை ஆகஸ்ட் 9ம் தேதிக்கு திட்டமிடப்பட்டது. நோயாளிக்கு தேவையான அனைத்தையும் நாங்கள் முன்கூட்டியே தயார் செய்தோம். குறிக்கப்பட்ட அதே நாளில் இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 2 மணி நேரம் வரை நடந்தது. டாக்டர் கௌரவ் செப்டமில் இருந்த விலகலை சரி செய்து, நோயாளி கேட்டபடி மூக்கையும் மாற்றி அமைத்தார். அதே நாளில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் விரைவாக குணமடைய மருத்துவர் விரிவான வழிகாட்டியை வழங்கினார். அவர் 7 நாட்களுக்குப் பிறகு தொடர் சிகிச்சைக்காக மீண்டும் சென்றார். மூக்கில் இருந்த தையல்கள், ஸ்ப்ளிண்ட் ஆகியவை அகற்றப்பட்டன. அவரது மூக்கை கவனமாக பரிசோதித்த மருத்துவர், அவர் சரியாக குணமடைவதை உறுதி செய்தார். 

    நல்ல விஷயம் என்னவென்றால், ஆகாஷ் மருத்துவரின் அறிவுரைக்கு மிகவும் கட்டுப்பட்டு இருந்ததால், ஒரு மாதத்திற்குள் முழுமையாக குணமடைந்தார். அவரது மூக்கின் வீக்கம் அரிதாகவே காணப்பட்டது, தழும்பும் படிப்படியாக மறைந்து வருகிறது. அவரது அறுவை சிகிச்சை முடிந்து 2 மாதங்களுக்கு மேலாகியும் இறுதி முடிவுகள் இன்னும் சரியாகப் புலப்படவில்லை. ஆனால், இப்போதைய நிலையில், அறுவை சிகிச்சையால் மகிழ்ச்சி அடைந்துள்ள அவர், இறுதி முடிவை காண பொறுமையாக காத்திருக்கிறார்.

    FAQs (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் )

    ரைனோபிளாஸ்டி என்பது அழகு சார்ந்த அறுவை சிகிச்சையா

    ரைனோபிளாஸ்டி என்பது முதன்மையாக ஒரு அழகு சார்ந்த சிகிச்சை முறையாகும் ஆனால் இதன் மூலம் மறுசீரமைப்பும் செய்யப்படுகிறது. மூக்கின் வடிவத்தை மாற்ற சில மறுசீரமைப்பு வேலைகள் தேவைப்படுகிறது, இது சுவாச பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

    ரைனோபிளாஸ்டிக்குப் பிறகு ஏற்படக்கூடிய பொதுவான பக்க விளைவுகள் என்ன?

    ரைனோபிளாஸ்டிக்குப் பிறகு பொதுவாக மக்கள் அனுபவிக்கும் சில பொதுவான பக்க விளைவுகள்: 

    • மூக்கு வழியாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுதல்
    • தொடர்ச்சியான வலி, தோல் நிற மாறுபாடு 
    • வேண்டாத தழும்பு

    ரைனோபிளாஸ்டி அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு இரவு முழுவதும் மருத்துவமனையில் இருக்க வேண்டுமா?

    இல்லை, பொதுவாக ரைனோபிளாஸ்டி அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரவு தங்க வேண்டிய அவசியமில்லை. இந்த செயல்முறை புறநோயாளி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு, சில மணி நேரம் கழித்து நோயாளி டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

    ரைனோபிளாஸ்டிக்கு என்ன வகையான அனெஸ்தீஷியா பயன்படுத்தப்படுகிறது?

    பொதுவாக, ரைனோபிளாஸ்டிக்கு ஜெனரல் அனெஸ்தீஷியா பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, முழு அறுவை சிகிச்சையின் போதும் நோயாளி தூங்கிக் கொண்டிருப்பார்.

    ரைனோபிளாஸ்டி ரிசல்ட் திருப்தி அளிக்கவில்லை என்றால் மறுசிகிச்சை கிடைக்குமா?

    ஆம், உங்கள் மூக்கின் வடிவத்தில் நீங்கள் மேலும் மாற்றங்களைச் செய்ய விரும்பினால் ஒரு திருத்தலைப் பெறலாம். பிளாஸ்டிக் சர்ஜன் உங்கள் மூக்கைப் பார்த்து உங்களுக்கு இந்த அறுவை சிகிச்சை பாதுகாப்பானதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பார்.

    green tick with shield icon
    Content Reviewed By
    doctor image
    Dr. Rohit Devdutt Bavdekar
    30 Years Experience Overall
    Last Updated : May 23, 2024

    Types of Rhinoplasty (ரைனோபிளாஸ்டியின் வகைகள்)

    Open Rhinoplasty (திறந்த ரைனோபிளாஸ்டி )

    எக்ஸ்டர்னல் ரைனோபிளாஸ்டி என்றும் அழைக்கப்படும் இந்த முறையில், மூக்குத்துவாரங்களைப் பிரிக்க கொலம்பெல்லாவில் ஒரு சிறிய வெட்டுக்காயத்தை உருவாக்கப் படுகிறது. பின்னர் மருத்துவர் அடிப்படை எலும்பு மற்றும் குருத்தெலும்பு அணுகுகிறார். செயல்முறையின் போது முழு கட்டமைப்பும் வெளிப்படுத்தப்படுவதால், அறுவை சிகிச்சை நிபுணரால் மிகவும் துல்லியமாக கட்டமைப்பை மாற்றியமைக்க முடியும். நோயாளியின் மூக்கு கோணலாக இருக்கும் போதும் மூக்கு நுனியில் ஒரு குறிக்கப்பட்ட குறைப்பு அல்லது அதிகரிப்பு செய்யப்பட வேண்டி இருக்கும் போதும் திறந்த முறை நுட்பம் விரும்பப்படுகிறது. இந்த அணுகுமுறை தழும்பு ஒன்றை ஏற்ப்படுத்தலாம், ஆனால் அது பொதுவாக நாட்கள் செல்லச் செல்ல மறைந்துவிடுகிறது.

    Closed Rhinoplasty (மூடிய ரைனோபிளாஸ்டி)

    எண்டோனாசல் ரைனோபிளாஸ்டி என்றும் அழைக்கப்படும் இந்த அறுவை சிகிச்சையானது, மூக்கின் உள்ளே துளைகளை ஏற்படுத்தி செய்யப்பட்டு, அவை முழுமையாக மறைக்கப்படுவதால், மிகவும் சிக்கலானது. இடது மற்றும் வலது நாசிகளில் ஒரு வெட்டுக்காயம் செய்யப்படுகிறது மற்றும் வடிவம் மற்றும் அளவில் மாற்றங்கள் குறைந்த சிக்கல்களுடன் செய்யப்படுகின்றன. மூடிய நுட்பம் குறைந்த ஊடுருவும் தன்மையுடையது மற்றும் கண்களுக்கு தெரியும் தழும்புகளை ஏற்படுத்துவது இல்லை.

    Our Patient Love Us

    Based on 50 Recommendations | Rated 5 Out of 5
    • AA

      Aarushi

      4/5

      First and foremost, thank you for making me feel so much better.” “Thanks for your good care and concern…Your ‘manner’ put me at ease and helped me gain confidence. Because of you, I am doing very well.” “You are truly a remarkable doctor and professional that we respect and trust.

      City : BANGALORE
      Doctor : Dr. Surajsinh Chauhan
    • SK

      Sudevi Khandelwal

      5/5

      I had an amazing rhinoplasty journey with Prsityn Care. The entire team was supportive and attentive, and a surgeon did a fantastic job. My nose looks refined and elegant, and the surgery went smoothly. I appreciate the post-operative care they provided, and I would recommend Prsityn Care to anyone seeking rhinoplasty.

      City : VADODARA
    • SK

      Shwetank Khosla

      5/5

      Pristyn Care's rhinoplasty service is top-notch! The surgeon understood my aesthetic goals and delivered exactly what I wanted. My nose looks natural and fits my face perfectly. The recovery was smooth, and I experienced minimal discomfort. I'm thrilled with the results!

      City : COIMBATORE
    • SM

      Sonakshi Mondal

      5/5

      Pristyn Care's care and expertise during my rhinoplasty surgery were beyond expectations. The doctors were professional and empathetic, taking the time to understand my concerns. They explained the procedure in detail and put my mind at ease. Pristyn Care's team provided attentive post-operative care, ensuring my well-being during recovery. They were always available to answer my questions and provided valuable advice. Thanks to Pristyn Care, my nose is now reshaped, and I feel more comfortable and satisfied. I highly recommend their services for rhinoplasty surgery.

      City : RANCHI
    • KD

      Kamini Dhumal

      5/5

      Pristyn Care is the go-to place for rhinoplasty! I had my procedure done, and the results are spectacular. The staff made me feel comfortable and well-cared for, and expertise and attention to detail are commendable. I am incredibly happy with the outcome, and I can't thank Pristyn Care enough for their exceptional service.

      City : VADODARA
    • VA

      Vedprakash Atrey

      5/5

      I had my rhinoplasty done by Pristyn Care, and they truly lived up to their reputation. The entire experience was seamless, from scheduling the consultation to the aftercare. The surgeon was attentive and skilled, and I couldn't be happier with the outcome. Thank you, Pristyn Care!

      City : COIMBATORE